 
    
தேனொளி சிந்தும் தேயா நிலவை
தேடித் தேடிப் பார்க்கின்றேன்!
தென்படு ம் அழகை கண்பட நோக்கி
தெவிட்டாப் பாடலை வார்க்கின்றேன்!
நாநில மெங்கும் நல்லொளி சிந்தும்
நற்குண பொற்பினை ஏற்கின்றேன் !
நானும் அது போல் நன்மை செய்திட
நாளும் முயன்று தோற்கின்றேன்!
வானொளி சிந்தும் வரமதை தந்த
இயற்கையை எண்ணி வியக்கின்றேன்!
வாட்டும் துயரிலும் வாழ்க்கை ஒளிபெற
வழியால் நன்மை பயக்கின்றேன்!
தானொளி சிந்தித் தணியா புகழை
தரணியில் உன்போல் தாவெண்பேன்!
தனக்கும் நிகராய் எவரும் வேண்டாம்
என்றால் சரிதான் போவென் பேன்!

வெ. தமிழழகன் எம்ஏ பிஎட்
சேலம்.
Related News
Popular News
TODAY'S POLL
 
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%
                            
                            
                         
                     
                                 
                                                             
                                                             
                                                             
                             
                             
                             
                             
                             
                             
                     
                     
                  
                  
                  
                  
                  
                 