"பலர் தலையை
உருட்டி விடும்
பலர் தலையை
நிமிர்த்தி விடும்
கைவிரல் ஓட்டு..."
ஜனநாயகத்தை
பாதுகாக்கும்
கேடயம்
கைவிரல் ஓட்டு ..."
ஏழையை அரியாசனம்
ஆளச் செய்யும்
செல்வந்தனை
மண்ணை கவ்வச்
செய்யும்
கைவிரல் ஓட்டு ..."
ஆபத்தான
விளையாட்டு தான்
முடிவை மட்டும்
மாற்றும் திறமை
கைவிரல் ஓட்டு ..."
நாம் விரும்பும்
நல்லவனை
தூயவனை
எடுத்து காட்ட
முன் வரும்
கைவிரல் ஓட்டு .... "
கடமையை செய்ய
தவறாதே
நல்ல நாடும்
நல்ல தலைவனும்
உருவாக போடு
கைவிரல் ஓட்டு ..."
கள்ள ஓட்டுக்கு
இடம் தராதே
நல்ல ஓட்டால்
நாணயம் வளர்க்க
கைவிரல் ஓட்டு .... "
மக்கள் ஆட்சி
மறக்காமல் நீ
தவறவிடாமல்
கை விரல் ஓட்டு....."
- சீர்காழி .ஆர். சீதாராமன்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?