வி.கே.லக்ஷ்மிநாராயணன்
22,22 ஏ, ராமகிருஷ்ணா நகர்
மெயின் ரோடு, ராமகிருஷ்ணா நகர்
போருர், சென்னை 600 116
காலை பத்துமணி. அரக்கபரக்க அலுவலகத்தை அடைந்தவர்கள் பன்ச் மெஷினில் கார்டை தேய்த்துவிட்டு உள்ளே நுழைந்தனர். சரியான நேரத்தில் அலுவலகம் வந்ததால்
அதுவரை காணப்பட்ட டென்ஷன் அகன்று ஆசுவாசப்பட்டனர். சற்றே தளர்ந்த நடையுடன் சென்றனர்.
இரண்டாவது தளத்தில் ' ஏ ' பிரிவில் இயங்கும் பி.ஆர்.வோ. செக்ஷ்னில் ஒருவரைத் தவிர அனைவரும் வந்திருந்தனர்.
" சார்..." டைப்பிஸ்ட் காந்தா, பக்கத்தில் அமர்ந்துள்ள மனோகரை அழைத்தாள்.
" யெஸ் !"
" என்ன சார் இன்னும் நம்ப செக்ஷ்ன் ஹெட்டை காணோம் ?"
" அதுதாம்மா எனக்கும் தெரியல்ல ! சரியா ஒன்பதேமுக்காலுக்கே வந்து விடுவார். ஃபோனும் பண்ணல்ல...."
" நீங்க காண்டக்ட் பண்ணிப் பாருங் களேன் !"
அதுதான் சரி என நினைத்தமனோகர் செக்ஷ்ன் ஹெட் சரவணனின் கைப்பேசிக்கு தொடர்பு கொள்ள முயற்சிக்க ' ஸ்விட்ச் ஆஃப் ' என்று பதில் வந்தது. தன் கைப் பேசியில் ஸ்டோர் பண்ணி வைத்திருக்கும்
சரவணனின் வீட்டு லேண்ட் லைனை நம்பரை தொடர்பு கொள்ள முயற்சி த்தபோது சிக்னல் பிராப்ளம். அதனா ல் வெளியே சென்று மாடிப்படிகள் அருகில் உள்ள ஜன்னலோரம் நின்றுகொண்டு முயற்சி செய்தார்.
இரண்டு தடவை ரிங் போய் ரிஸீவர் எடுக்கப்பட்டது. " ஹலோ !" ஒரு பெண்ணின் குரல்.
" நான் மனோகர் , சாரோட வேலை செய்யறேன். அங்க யார் பேசறது ன்னு தெரிஞ்சுக்கலாம்மா ?"
" ஐயா...நான் வீட்டு வேலைக்காரி பேசறேனுங்க..!"
" சரிம்மா. சார் இன்னும் ஆஃபீஸ் வரல்ல..அதான் என்ன தகவல்ன்னு தெரிஞ்சுக்க ஃபோன் பண்ணி னேன் !"
மறுமுனையில் கொஞ்சநேரம் மெளனம். பிறகு மீண்டும் ஒலித்தது குரல். " ஐயா ! என்னத்தச் சொல்ற துங்க ..." தயங்கிவிட்டுத் தொடர் ந்தாள் . " சாரு! காலைலஎட்டுமணிக்கு பூஜையறையைவிட்டு வெளியே வந்த அய்யா அப்படியே நெஞ்சைப் பிடி ச்சிக் கிட்டு சாய்ஞ்சாரு. ஆஸ்பத் திரிக்கு கூட் டிக்கிட்டுப் போனா ங்க.ஆனா...9 மணிக்கு உயிர் பிரிஞ்சிடிச்சு. எல்லாரும் ஆஸ்பத்தி
ரியிலேதான் இருக்காங்க. " குரல் பிசிரடித்தது.
அதிர்ச்சியில் ஒருகணம் உறைந்து போன மனோகர் பிறகு சுதாரித்துக் கொண்டார்." எந்த ஆஸ்பத்திரி ம்மா ?"
" சபரி ஆஸ்பத்திரிங்க!"
கைப்பேசியை அணைத்த மனோகர் திக்பிரமையில் ஆழ்ந்தார்.
54 வயதுதான் ஆகிறது. எத்தனை உயர்ந்த மனிதர் ! சிரித்த முகம். எள்ளளவும் கோபம் வராது. செக்ஷ்ன் ஹெட் என்கிற கர்வமில்லாமல் அனைவரிடமும் சரி சமமாகப் பழகு
வார்.
'ஏ.ஜி.எம். பதவி உயர்வு கூடகிடைக்க இருந்தது. அதற்குள் விண்ணுலகம் சென்று விட்டாரே ' உள்ளுக் குள் மாய்ந்துபோனார் மனோகர்.
முதலில் தன் செக்ஷ்னில் உள்ளவ ர்களுக்கு விஷயத்தைத் தெரிய ப்படுத்த வேண்டும்.பிறகு போர்டில் சரவணனின் டெத் மெசேஜை
எழுதலாம் என நெஞ்சு கனக்க திரும்பி நடந்தார் மனோகர்.
அப்பொழுது லிஃப்ட் வந்து நின்றது. அதலிருந்து ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.கடைசியாக வந்த நபரைப் பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது மனோகருக்கு. சரவணன்
கையில் லஞ்ச் பேக்குடன் வந்தார்.
" குட் மார்னிங் சார் !" என்றார் மனோகர் இன்ப அதிர்ச்சியுடன்!
" குட்மார்னிங் மனோகர் ! என்னடா இது இவர் லேட்டா வர்றாரேன்னு திகைச்சுப் போயிட்டீங்களா?"
" ஆமா.....சார் ! " அசடு வழிய சொன்னார் மனோகர்.
" வழக்கமா வர்ற வழியில ஒரு ஆக்சிடெண்ட். டிராஃபிக் ஜாமாயிடிச்சு. அதனால சுத்தி வர
வேண்டிதாப் போச்சு!"
" உங்க செல்லுக்கும் காண்டக்ட் பண்ண முயற்சி செஞ்சேன். ஆனா ஸ்விட்ச் ஆஃப்?ஆகியிருந்தது."
" யெஸ்...டிரைவிங்ல இருக்கறப்ப செல்ல ஸ்விட்ச் ஆஃப் பண்ணற வழக்கம். "
" அதனால உங்க வீட்டு லேண்ட் லைனை காண்டக்ட் பண்ணனும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். அதுக் குள்ளாற நீங்களே வந்தும்டீங்க...சரி சார்...நான் டாய்லெட் போயிட்டு
வரேன்."
சிரித்தபடி சரவணன் செக்ஷனுக்குள் நுழைந்தார். அவர் போவதையே பார்த்துக்கொண்டிருந்த மனோகர் பிறகு டாய்லெட்டில் நுழைந்தார்.
இது எப்படி சாத்தியம் ? .....எங்கோ தவறு நிகழ்ந்திருக்கு. தான் வேலை க்காரியுடன் பேசியதை ரீவைண்ட் செய்தார். எந்த இடத்திலும் சரவணனின் பெயரை உச்சரிக்க
வில்லை . அதைப்போல் வேலைக் காரியும் ' அய்யா ' என்றுதான் இறந்தவரைப்பற்றி கூறினாள். ஸோ முதலாவது கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது.
இரண்டாவது தொலைபேசி நம்பர்..பரீட்சித்துப்பார்த்தபோது திடுக்கிட்டார் மனோகர். அதாவது கடைசி 192 க்கு பதிலாக182 நம்பரை அழுத்திப் பேச....சே ! பதட்டத்தில் தான் அவசரப்பட்டதால் இத்தனை
குழப்பம் !
நல்லவேளை ! செக்ஷ்னில் எல்லாரி டமும் சொல்லாமல் விட்டது நல்லதாய் போய்விட்டது. சொல்லியிருந்தார் மிகவும் ரஸாபாஸமாய் இருந் திருக்கும்! அதற்குள் சரவணன்
வந்தது தெய்வச்செயல் ! என எண்ணினார் மனோகர்.
அந்த இறந்துபோன மூணாவது மனுஷருக்காக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்திவிட்டு அகன்றார்.
.....................................