பனைக்குளத்தில்பெண்கள் மேல்நிலை பள்ளி புதிய கட்டிடம் கட்டுவதற்கு கட்டுமானப் பணி ஆரம்பம்
Oct 28 2025
12
பனைக்குளம் அக் 28= ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், பனைக்குளத்தில் தெற்கு தெருவில் புதிய மேல்நிலைப் பள்ளியின் கட்டுமானப் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதில் பனைக்குளம் முஸ்லீம் பரிபாலன சபை தலைவர் K.அப்துல் வாஹப் முஸ்லீம் நிர்வாக சபை தலைவர் K.கரீம் கனி தலைமையில் பனைக்குளம் தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலீம் மிஸ்பாஹி துஆ ஓதினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியை R ஸ்ரீதேவி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ம.க. அலோஷியா ஷோபா
மற்றும் , ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி பௌசியா பானு பரிபாலன சபை துணைச் செயலாளர் சேக் உதுமான் நிர்வாக சபை செயலாளர் ரசீது அலி மற்றும் பல நிர்வாகிகளும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?