பயிற்சியில் ஸ்மிருதி மந்தனா: இலங்கை தொடருக்கு 'ரெடி'

பயிற்சியில் ஸ்மிருதி மந்தனா: இலங்கை தொடருக்கு 'ரெடி'


 

புதுடில்லி: திருமணம் ரத்தான நிலையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா பயிற்சியை துவக்கினார்.



இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 29, மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாலிவுட் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் 30, திருமணம் சமீபத்தில் ரத்தானது. இக்கடினமான கால கட்டத்தில் இருந்து மீண்டு வர, சர்வதேச போட்டிகளின் மீது கவனம் செலுத்தி வருகிறார் ஸ்மிருதி.



இந்தியா வரவுள்ள இலங்கை அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகள் விசாகப்பட்டினத்திலும் (டிச. 21, 23), கடைசி 3 போட்டிகள் திருவனந்தபுரத்திலும் (டிச. 26, 28, 30) நடக்கவுள்ளன. இத்தொடருக்கு தயாராக இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா வலைப்பயிற்சி மேற்கொண்டார். இதற்கான புகைப்படத்தை ஸ்மிருதியின் சகோதரர் ஷ்ரவன் மந்தனா, சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%