பழனிசாமி போவது புரட்சி பயணம் அல்ல, புளிச்ச பயணம் அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு
Jul 24 2025
10

சென்னை, ஜூலை 25-
எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் புரட்சி பயணம் இல்லை, புளிச்ச பயணம் என்று அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்தார்.
சென்னை திரு.வி.க நகர், புளியந்தோப்பு மற்றும் கன்னிகாபுரம் பகுதியில் நேற்று நடந்த ‘அன்னம் தரும் அமுத கரங்கள்’ நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி-
• கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே?
அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சியில் எங்கே போனது அந்த வாக்குறுதி?
•முதல்வரை பழனிசாமி ஒருமையில் பேசி வருகிறாரே?
அப்படி ஒருமையில் பேசுவது எதிர்க்கட்சித் தலைவரின் தரத்தை காட்டுகிறது. அடிமை இயக்கம் யார் நடத்துகிறார்கள் என்பது அவர்களுக்கே புரியும். ஒவ்வொரு நாள் பிரச்சார பயணத்திலும், ஒவ்வொரு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. திமுக சந்தித்த தேர்தல்களில், தோல்வியை மட்டும் எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் பரிசாக தந்து கொண்டிருக்கிறது.
புளிச்ச பயணம்
எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் புரட்சி பயணம் இல்லை, புளிச்ச பயணம். தீர்வில்லாத பயணம். ஆன்மீகம் தமிழை வளர்த்தது, தமிழ் ஆன்மீகத்தை வளர்த்தது. இதில் மாற்று கருத்து இல்லை. ஆன்மீகம், தமிழ் இரண்டும் ஒன்றாக கலந்தது தான்.
மக்களோடு இருக்கின்ற முதலமைச்சர் தினம்தோறும் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒட்டுமொத்த திட்டங்களையும் மக்களிடையே கொண்டு செல்ல முடியாது. மக்களின் தேவைகளை அறிந்து தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு திட்டங்களையும் கொண்டு செல்ல முடியும்.
இவ்வாறு சேகர்பாபு கூறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?