பிஆர்எஸ் கட்​சியிலிருந்து மேலவை உறுப்பினர் கவிதா சஸ்பெண்ட்: மகள் மீது கே.சந்திரசேகர ராவ் ஒழுங்கு நடவடிக்கை

பிஆர்எஸ் கட்​சியிலிருந்து மேலவை உறுப்பினர் கவிதா சஸ்பெண்ட்: மகள் மீது கே.சந்திரசேகர ராவ் ஒழுங்கு நடவடிக்கை

ஹைத​ரா​பாத்:

தெலங்​கானா மாநிலத்​தில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்​எஸ்) கட்​சி​யின் தலை​வர் கே. சந்​திரசேகர ராவ் தலைமையி​லான ஆட்​சி​யில் கட்​டப்​பட்ட காலேஷ்வரம் அணை​யின் ஒரு தூண் சரிந்​த​தால், தற்​போதைய காங்​கிரஸ் அரசு இது தொடர்​பாக விசா​ரணை நடத்​தி​யது.


மேலும், இதுகுறித்து சிபிஐ விசா​ரணைக்​கும் உத்​தர​விட்​டுள்​ளது. பிஆர்​எஸ் ஆட்​சி​யில் கட்​டப்​பட்ட காலேஷ்வரம் அணை, அப்​போதைய ஆட்​சி​யாளர்​களால் கமிஷன் பெறப்​பட்​டு, தரமின்றி கட்​டப்​பட்​ட​தாக தற்​போதைய காங்​கிரஸ் அரசு குற்​றம் சாட்டி வரு​வதோடு, இதற்​காக சிபிஐ விசா​ரணை தேவை என்​றும் முடிவு செய்​துள்​ளது.


இது தற்​போது தெலங்​கா​னா​வில் பெரும் அரசி​யல் புயலை கிளப்​பி​யுள்​ளது. சிபிஐ விசா​ரணை தேவை என ரேவந்த் ரெட்டி அரசு தீர்​மானித்​ததை தொடர்ந்​து, பிஆர்​எஸ் கட்சி தலை​வரும், முன்​னாள் முதல்​வர் கே. சந்​திரசேகர ராவின் மகளு​மான கவிதா தனது கட்​சி​யினர் மீது தீவிர குற்​றச்​சாட்​டு​களை முன் வைத்​தார்.


“காலேஷ்வரம் அணை கட்​டும்​போது, தெலங்​கானா மாநில நீர்​வளத்​துறை அமைச்​ச​ராக ஹரீஷ் ராவ் இருந்​தார்​.(இவர் கவி​தா​வின் சொந்த தாய்​மாமன் ஆவார்) மேலும், இதில் கட்​சி​யின் மூத்த தலை​வரும், மாநிலங்​களவை எம்​பி​யு​மான சந்​தோஷும் சம்​பந்​தப்​பட்​டுள்​ளார். இவர்​களால்​தான் என்​னுடைய தந்​தை​யான கே. சந்​திரசேகர ராவுக்கு அவப்​பெயர் ஏற்​பட்​டது.


தற்​போது சிபிஐ விசா​ரணை வரை சென்​றுள்​ளது. இப்​போதெல்​லாம் சந்​திரசேகர ராவை சுற்​றி​லும் என்னை குறை கூறும் கும்​பல் மட்​டுமே உள்​ளது” என கவிதா சரமாரி​யான குற்​றச்​சாட்​டு​களை அடுக்​கி​னார்.


இது தெலங்​கானா அரசி​யலில் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. இதனைத் தொடர்ந்​து, என்ன நடக்​குமோ என எதிர்​பார்த்​திருந்த வேளை​யில், நேற்று பிஆர்​எஸ் கட்​சி​யின் செய​லா​ளர்​களான பரத் குமார் மற்​றும் ரவீந்​திர​நாத் ராவ் ஆகியோர் கூட்​டாக ஒரு அறிக்​கையை வெளி​யிட்​டனர்.


அதில், கட்​சிக்கு களங்​கம் விளைவிக்​கும் விதத்​தில் நடந்து கொண்ட நிஜா​மா​பாத் மேலவை உறுப்​பின​ரான கே. கவி​தா, பிஆர்​எஸ் கட்​சி​யில் இருந்து சஸ்​பெண்ட் செய்​யப்​படு​கிறார் என அந்த அறிக்​கை​யில் தெரி​வித்​திருந்​தனர்.


இது அக்​கட்​சித் தொண்​டர்​களை மேலும் அதிர்ச்​சிக்​குள்​ளாக்​கியது. இதனைத் தொடர்ந்​து, கவி​தா, தனது அடிப்​படை உறுப்​பினர் பதவியை​யும், மேலவை உறுப்​பினர் பதவியை​யும் ராஜி​னாமா செய்​வார் என கூறப்​படு​கிறது. மேலும் அவர் தெலங்​கா​னா​வில் புதிய கட்​சி​யை​யும் தொடங்​கு​வார்​ என்றும் சிலர் கூறி வருகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%