புத்தன்துறையில் கடல் அரிப்பு தடுப்புசுவர் கட்ட ஏற்பாடு

புத்தன்துறையில் கடல் அரிப்பு  தடுப்புசுவர் கட்ட ஏற்பாடு


நாகர்கோவில், ஜூலை 25-


புத்தன்துறை கடற்கரை பகுதியில் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் அழகுமீனா உறுதி அளித்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் துறை கடற்கரை பகுதியில் நேற்று முதல் அதிகமான கடல் சீற்றத்தின் காரணமாக, கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் மணல் அரிப்பு ஏற்பட்டு, 12 வீடுகள் சேதம் அடைந்தன. தென்னை மரங்களும் சாய்ந்துள்ளன. அந்த பகுதிகளை கலெக்டர் அழகுமீனா நேற்று பார்வையிட்டார். தற்காலிகமாக கடல் அரிப்பை தடுக்க உடனடியாக பணிகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் இப்பகுதியில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு மீன்பிடி துறைமுக கோட்டம் மூலம் தயார் செய்து, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். தொடர்ந்து கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் இங்குள்ள பொதுமக்கள் அரசு ஏற்பாடு செய்துள்ள முகாம்களில் தங்கி இருக்கும்படி கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

 ஆய்வில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, மீன்வளத்துறை உதவி இயக்குநர் தீபா, மற்றும் மீனவர்கள் கலந்துகொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%