புலம்பெயர் மக்களை கைது செய்யும் காவலர்களுக்கு ஊக்கத்தொகை: இனவெறியை தூண்டும் வகையில் திட்டம் அறிவிப்பு
Sep 06 2025
74
வாஷிங்டன், செப். 3-
அமெரிக்காவில், குடியேற்ற விதிகளை மீறுபவர்களைக் கைது செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் 1,000 டாலர் வரை ஊக்கத்தொகை வழங்கப் படும் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டினரை அமெ ரிக்காவில் இருந்து துரத்துவதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதற்காக தனிப் பிரிவுகளை உரு வாக்கி அதிகாரிகளை நியமித்து நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் நாடு கடத்தல் திட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அதிக நபர்களை கைது செய்து நாடு கடத்தும் அதிகாரிகளுக்கு வெகுமதிகளை அறி வித்துள்ளது அமெரிக்க அரசு. இதற்காக 287(ஜி) என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைந்த அதிகாரிகளின் சம்பளம், சலுகை கள் மற்றும் சில கூடுதல் நேரச் செலவுகளை அமெரிக்க அரசாங்கமே செலுத்தும். மேலும் இதற்காக 10,000 புதிய அதிகாரிகள் மற்றும் முகவர்களை நியமிக்க, 50,000 டாலர் வரை நியமன ஊக்கத்தொகையையும் அறி வித்துள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் அதிகாரிகளால் கைது செய்யப்படும் வெளிநாட்டவரின் எண் ணிக்கை மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப் பட்ட இலக்குகள் எவ்வளவு சதவீதம் அடை யப்படுகிறது என்பதைப் பொறுத்து, ஒவ்வொரு அதிகாரிக்கும் 500 டாலர் முதல் 1,000 டாலர் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். 2025 ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் 23 வரை நாடு முழுவதும் சுமார் 1,68,000 வெளி நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் சுமார் 1,50,000 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள ஊக்கத்தொகை திட்டமானது இனவெறியை அதிகரிக்கும் வெறுப்பு ணர்வை மேலும் அதிகரித்து விடும் என பல தரப் பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?