விழுப்புரம் மாவட்டம் ஜனவரி- 25 அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோயில் மலையடிவாரத்தில் சாணக்குல கோத்திர பூஜையும், பேரண்டாலு பூஜை மஞ்சளினால் (கௌரம்மா) அம்மன் வைத்து, கோத்திரப் புடவை வைத்து, மஞ்சளினால் பிள்ளையார் வைத்து , வண்ணமலர் மாலைகளால் அலங்கரித்து, வேத மந்திரங்கள் ஒலிக்க, பாட்டுகள் பாடி, பொங்கல் வைத்து, பழங்கள், வடை, அப்பம், மாவிளக்கு மாவு வைத்து தீபம் ஏற்றி, பிரசாதம், நெய்வேத்தியங்களுடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது. சாணக்குல கோத்திரக்காரர்கள், ஆர்ய வைஸ்ய ஆண்கள், பெண்கள் அனைவரும் ஜெய் வாசவி ஜெய் ஜெய் வாசவி என்று கோஷமிட்டு வேண்டி அருள் பெற்றனர். அனைவருக்கும் காலை, மதியம் 2-வேலை உணவு பரிமாறப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?