பெருங்கவிஞர் ஒருவருக்கு
பொன்னாடை போர்த்தி
வணங்கி நின்றேன்
புகைப்படத்தில்
பதிவாகும்வரை
புன்னகைத்தது இருவரின் முகங்களும்
பின்பு பேசி மகிழ்ந்து
பிரியாவிடை பெற்று
சென்றுகொண்டே
நினைத்துப் பார்க்கிறேன்
' எனக்கு யாரோ அணிவித்ததை
இன்று அவர்க்கு!
நாளை அவரும்
வேறு யாருக்கோ?'
ஓ...
பொன்னாடையின்
பயன்பாடு என்பது
இதுதானோ?
கருமலைப்பழம் நீ
74, திருப்பூர் குமரன் தெரு வியாசர்பாடி சென்னை 39
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%