போலி ‘பிஸ்ஸா ஹட்' உணவகத்தை திறந்து வைத்த பாக். அமைச்சர் - நெட்டிசன்கள் கிண்டல்

போலி ‘பிஸ்ஸா ஹட்' உணவகத்தை திறந்து வைத்த பாக். அமைச்சர் - நெட்டிசன்கள் கிண்டல்


 

சியால்கோட்: ​​பாகிஸ்​தான் பாது​காப்பு அமைச்​சர் கவாஜா ஆசிப் போலி ‘பிஸ்ஸா ஹட்' கிளை​யைத் திறந்து வைத்த சம்​பவம் சர்​வ​தேச அளவில் கேலிக்​கும் கிண்​டலுக்​கும் உள்​ளாகி​யுள்​ளது.


பாகிஸ்​தானின் சியால்​கோட் ராணுவக் குடி​யிருப்பு பகு​தி​யில் புதி​தாகத் தொடங்​கப்​பட்ட ஒரு உணவகத்​துக்​கு, அமெரிக்​கா​வின் புகழ்​பெற்ற பிஸ்ஸா ஹட் நிறு​வனத்​தின் பெயர் மற்​றும் சின்​னங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டிருந்​தன. இந்த உணவகத்​தின் திறப்பு விழா மிக விமரிசை​யாக நடை​பெற்​றது.


மலர் அலங்​காரங்​கள், சிவப்​புக் கம்பள வரவேற்பு என அமர்க்​களப்​பட்ட அந்த விழா​வில், பாகிஸ்​தான் பாது​காப்பு அமைச்​சர் கவாஜா ஆசிப் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்​து​கொண்டு ரிப்​பனை வெட்டி உணவகத்​தை தொடங்கி வைத்​தார்.


இந்​தத் திறப்பு விழா தொடர்​பான புகைப்​படங்​கள் மற்​றும் வீடியோக்​கள் சமூக வலை​தளங்​களில் வைரலாகின. இதைப் பார்த்த பிஸ்ஸா ஹட் பாகிஸ்​தான் நிறு​வனம் உடனடி​யாக ஒரு அறிக்​கையை வெளி​யிட்​டது. அதில், "சி​யால்​கோட்​டில் திறக்​கப்​பட்​டுள்ள அந்த உணவகம் எங்​களது அதி​காரப்​பூர்வ கிளை அல்ல. அது போலி​யானது மற்​றும் எங்​கள் நிறுவன பெயர் தவறாகப் பயன்​படுத்​துகிறது. இதற்​கும் பிஸ்ஸா ஹட் நிறு​வனத்​துக்​கும் எந்தத் தொடர்​பும் இல்​லை.


எங்​கள் பெயரை பயன்​படுத்த தடை விதிக்​கக் கோரி புகார் அளித்​துள்​ளோம்" என்று கூறப்​பட்​டுள்​ளது. சமூக வலை​தளங்​களில் கேலி இதனிடையே, நாட்​டின் பாது​காப்பு அமைச்​ச​ராக இருக்​கும் ஒரு​வர், ஒரு உணவகத்​தை திறந்து வைப்​ப​தற்கு முன்​பாக அது உண்​மை​யானதா என்​ப​தைக் ​கூட சரி​ பார்க்​காதது ஏன் என்று நெட்​டிசன்​கள் கேள்வி எழுப்பி வரு​கின்​றனர்.


சமூக வலை​தளம் ஒன்​றில், "ஒரு ரிப்​பன் வெட்​டு, ஒரு மறுப்பு அறிக்கை - இது ஒரு புதிய உலக சாதனை" என ஒரு​வர் பதி​விட்​டுள்​ளார். "பாது​காப்பு அமைச்​சருக்கே பாது​காப்பு இல்​லாத நாடு" என்​று மற்​றொரு​வர்​ பதி​விட்​டுள்​ளார்​.


--------

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%