மகளிர் உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு 245 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து
Oct 23 2025
17

கொழும்பு,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. இந்த போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
தொடர்ந்து இங்கிலாந்தின் தொடக்க வீரர்களாக எமி ஜோன்ஸ் மற்றும் டாமி பியூமாண்ட் களம் கண்டனர். இதில் டாமி பியூமாண்ட் ஒரு புறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் எமி ஜோன்ஸ் 18 ரன், ஹெதர் நைட் 20 ரன், நாட் ஸ்கிவர் பிரண்ட் 7 ரன், சோபிய டங்க்ளி 22 ரன், எம்மா லாம்ப் 7 ரன் எடுத்து அவுட் ஆகினர்.
மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய டாமி பியூமாண்ட் அரைசதம் அடித்த நிலையில் 78 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 244 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அன்னபெல் சதர்லேண்ட் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 245 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆட உள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?