மக்களிடம் இருந்து மக்களுக்காக சீன அரசின் ஐந்தாண்டுத் திட்டம் : 31 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆலோசனைகள்
Aug 10 2025
22

பெய்ஜிங். ஆக.8-
2026 முதல் 2030 வரையிலான சீனாவின் ஐந்தாண்டுத் திட்டங்களை வடிவமைப்பதற்காக சீன அரசு சுமார் 31,13,000 க்கும் அதிகமான ஆலோ சனைகளைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இது கடந்த கால ஐந்தாண்டு திட்டங்களை வகுக்க சீன அரசுக்கு கிடைத்த ஆலோசனைகளை விட மூன்று மடங்கு அதிகமாகும். கடந்த 2020 இல் 14 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்க வும் இணையதளம் மூலமாகவே மக்களிடம் ஆலோசனைகள் பெறப்பட்டன. அப்போது 10 லட்சத்துக்கும் அதிகமான ஆலோசனைகள் பெறப்பட்டன. ஆனால், இந்த முறை கிடைத்தி ருக்கும் ஆலோசனைகளின் எண்ணிக்கையா னது சீன கம்யூனிஸ்ட் கட்சியும், அரசும் மக்களு டனான தொடர்பை மேலும் நெருக்கமாக ஆக்கி யுள்ளதை வெளிப்படுத்துவதுடன், திட்டம் வகுப் பதில் மக்களின் அபாரமான பங்களிப்பு மற்றும் அவர்கள் அடைந்துள்ள விழிப்புணர்வையும் பிரதிபலிக்கிறது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?