மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு உறுதியானது

மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு உறுதியானது



சென்னை, அக். 24 - பாலியல் புகாரில் சிக்கிய அரசு பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகியுள்ள தாகவும், அதுதொடர்பான அறிக்கையை அரசுக்கு அனுப்ப உள்ளதாகவும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரி வித்துள்ளது. சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் வாய் நோய்க்குறியியல் (ஓரல் பேத்தாலஜி) துறை தலைவராக வும், பேராசிரியராகவும் இருந்தவர் டாக்டர் ஐ. பொன்னையா. இவர் மீது முதுநிலை மருத்துவ மாணவிகளும், துறை சார்ந்த பெண் ஊழியர்களும் பாலியல் குற்றச் சாட்டுகளை முன்வைத்தனர். இதுதொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் அந்தப் பேராசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமையி லான குழுவும் இதுதொடர்பாக விசாரித்து வந்தது. அதில் பொன்னையா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அந்த விசாரணை அறிக்கையைத் தான், விரைவில் அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரி வித்துள்ளதாவது: முதற்கட்ட விசாரணையில் பொன்னையா மீதான குற்றச் சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு, அவர் மீது 17பி குற்றக் குறிப்பாணை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவ டிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அவருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு தடைபடும். இந்த விவ காரத்தில் அவரது தரப்பு விளக்கமும் பெறப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை நிறைவடைந்து இறுதி அறிக்கை அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன்பேரில் அரசு நடவடிக்கையை எடுக்கும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News