மழை எச்சரிக்கை: பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் எதைக் குறிக்கின்றன?

மழை எச்சரிக்கை: பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் எதைக் குறிக்கின்றன?



சென்னை, அக். 23 - ஒவ்வொரு பருவமழை காலத்திலும் இந்திய வானிலை ஆய்வு மையமும் சென்னை வானிலை ஆய்வு மையமும், தமிழ்நாடு அரசு மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சி யர்கள் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் எச்சரிக்கைகளை வழங்குகின்றன. அதேபோல் கடலுக்குச் செல்லும் மற்றும் சென்றிருக்கும் மீனவர்கள் பாதுகாப்பாக திரும்பி வர வேண்டியது தொடர்பான அறிவிப்புகளையும் வழங்குகின்றனர். நிறங்களின் அடிப்படையில் இந்த எச்சரிக்கைகளின் தன்மைகள் வகைப்படுத்தப் படுகின்றன. பச்சை : இதில் முதலாவதாக பச்சை நிறம் உள்ளது. இந்த நிறம் வானிலை முற்றிலும் பாது காப்பாக உள்ளது, வழக்கமான அன்றாட நட வடிக்கைகளைத் தொடரலாம். எந்த முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையும் தேவையில்லை என்பதை குறிக்கிறது. மஞ்சள் : வானிலை மோசமடைய வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மஞ்சள் நிறம் வழங்கப்படும் இந்த நிறம் வழங்கப்பட்ட பகுதிகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பிருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆரஞ்சு : கடுமையான வானிலை உறுதியாகி யுள்ள பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை வழங்கப்படும். இந்த நிறம் வழங்கப்பட்ட பகுதி களில் மின்சாரம், தகவல் தொடர்பு போன்ற பொதுச்சேவைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. மக்கள் தங்கள் அன்றாட திட்டங் களை மாற்றியமைத்துக் கொண்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். சிவப்பு : சிவப்பு நிறம் எச்சரிக்கை, மிகவும் அபாயகரமான வானிலையை குறிக்கிறது. இந்த நிறம் வழங்கப்பட்ட பகுதிகளில் இயற்கை பேரிடர் ஏற்பட்டு உயிருக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தலாக அமையலாம். உள்ளூர் அதிகாரி கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் உடனடி யாகச் செயல்பட வேண்டியிருக்கும். மக்கள் உடனடி யாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதை சிவப்பு நிறம் குறிக்கிறது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%