மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து சைக்கிளில் சென்ற சிறுவன் பலி

மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து சைக்கிளில் சென்ற சிறுவன் பலி


 

காந்தி நகர்,


குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் ஜஹாங்கீராபாத் பகுதியை சேர்ந்தவர் அமோல் போர்சி. இவரது மகன் ரஹனேஷ் (வயது 8).


இந்நிலையில், சிறுவன் ரஹனேஷ் இன்று தனது நண்பர்களுடன் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சைக்கிளில் சென்றுள்ளான். அப்போது, அப்பகுதியில் பட்டத்தில் உள்ள மாஞ்சா நூல் சிறுவன் ரஹனேசின் கழுத்தை அறுத்துள்ளது. இந்த சம்பவத்தில் சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டது.


உடனடியாக, சிறுவனை மீட்ட அப்பகுதி மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ரஹனேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குஜராத்தில் நேற்று மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் போது பட்டம் விடுவது வழக்கமாகும். அவ்வாறு விடப்பட்ட பட்டத்தில் இருந்து மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து ரஹனேஷ் உயிரிழந்துள்ளான் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%