திருவண்ணாமலை மாவட்டம் ஜனவரி -25 கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளுக்கு இணங்க அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் திரு.B. வெங்கடேசன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர். பிரசன்னா அவர்கள் மருத்துவ முகாமை தலைமை ஏற்று துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக வட்டார கல்வி அலுவலர் திரு. ஸ்ரீ ராமுலு அவர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு. தண்டபாணி மற்றும் திரு.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர். இம் முகாமில் 150 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை பெற்று பயனடைந்தார்கள். முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி- சாலக்குப்பம் தலைமை ஆசிரியர் திருமதி. சுடர்விழி அவர்கள் மதிய உணவு வழங்கினார்.
இம்முகாமில் வட்டார வளமைய ஆசிரியர் சிறப்பு பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக வட்டார IE ஒருங்கிணைப்பாளர் திருமதி. செல்வம் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?