கடலூர், ஜன.25-
பெண்ணாடத்தில் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் பெண்ணாடம் லயன்ஸ் சங்கம் சார்பில் சிறப்பு மகளிர்ப் பட்டிமன்றம் மற்றும் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் நேற்று உலகத் திருக்குறள் கூட்டமைப்பு கடலூர் (மேற்கு) மாவட்ட மகளிர் துறைத் தலைவர் ஜெ. பிரியா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பெண்ணாடம் லயன்ஸ் சங்கத் தலைவர் லயன்.வசந்த்ராஜ் வரவேற்புரை ஆற்றினார்.
உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி, துணைத்தலைவர் சீனி. பழமலை, தலைமைத் துறை இயக்குநர் நிறைமதி நீலமேகம், லயன்ஸ் மாவட்டத் தலைவர் லயன். ஞா. ஞானப்பிரகாசம், மாவட்டச் செயலாளர் த. செல்வராசு, மாவட்டப் பொருளாளர் சி. நீலமேகம், லயன்ஸ் சங்க செயலாளர் இ. அழகுவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியை பேராசிரியர் அஸ்வினி ஆறுமுகம் சிறப்பாக நடத்தினார். கொடுக்கப்பட்டத் தலைப்புகளில் மாணவர்கள் சிறப்பாக பேசினார்கள்.மாணவர்களுக்கு இறுதியில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?