மின் மோட்டார்களின் காப்பர் கேபிள் திருட்டு

மின் மோட்டார்களின்  காப்பர் கேபிள் திருட்டு

பாபநாசம், ஆக.20 -

ஆற்றுப் பாசனம், வாய்க்கால் பாசனம் அற்று போன நிலையில், வாழ்வாதாரத்திற்காக விவ சாயிகள் மின் மோட்டா ருக்கு மாறினர். உர விலை உயர்வு, கூலி ஆட்கள் தட்டுப்பாடு, இயற்கை பேரிடர் என பல தடைகளை கடந்தால், வயலுக்கு நீர் பாய்ச்ச விவ சாயிகள் பல ஆண்டு களுக்கு முன்னர் பதிவு செய்து, காத்திருந்து முன் னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்பு பெற்று, மோட்டார் ரூம்களில் வைத்துள்ள மின் மோட்டா ருக்கும் தற்போது ஆபத்து வந்துவிட்டது. தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரம், மணலூர் பகுதிகளில் விவ சாய நிலங்களில் உள்ள 10-க்கும் அதிகமான மின் மோட்டார்களில் இருந்த கேபிள் திருட்டு போனது. அதிலுள்ள காப்பர் பல ஆயிரத்துக்கு விலை போகும் என்பதால், மோட் டார் திருடர்கள் திங்களன்று இரவு ஒரே நேரத்தில் பத்து மோட்டார்களில் இருந்து கேபிள்களை திருடிச் சென்றனர். மீண்டும் மின் மோட் டார்களை சரி செய்து, இயக்க விவசாயிகளுக்கு பல ஆயிரம் தேவைப்ப டும். இனி பகல் பொழுது மட்டுமல்ல, இரவு பொழு தையும் வயலில்தான் கழிக்க வேண்டுமா என விவசாயிகள் புலம்புகின்ற னர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%