முகாமிற்கு வராத வட்ட வழங்கல் அலுவலர்கள்: பொதுமக்கள் ஏமாற்றம்

முகாமிற்கு வராத வட்ட வழங்கல் அலுவலர்கள்: பொதுமக்கள் ஏமாற்றம்

கும்பகோணம், ஆக.20 -

தமிழக அரசு உங்களுடன் ஸ்டா லின் எனும் திட்டத்தில் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் பொன்னி யம்மன் கோவில் வளாகத்தில், நாச்சி யார்கோவில், மாத்தூர், திருப்பந்துறை ஆகிய ஊராட்சிகளுக்கான முகாம் புத னன்று நடைபெற்றது. முகாமை கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த.அன்பழகன் துவக்கி வைத்தார். முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். முகாமில் திரு விடைமருதூர் வடக்கு ஒன்றிய செய லாளர் சரவணன், நாச்சியார்கோவில் ஊராட்சி செயலாளர் பூபதி, மாவட்ட பிரதிநிதி உமாசங்கர், கும்பகோணம் வட்டாட்சியர் சண்முகம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், நாச்சி யார்கோவில் ஊராட்சி செயலர் வரத ராஜன் ஆகியோர் மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனர். முகாமில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கு 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு பரிசீல னைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குடும்ப அட்டை சம்பந்தமாக பெயர் சேர்த்தல், நீக்கல், குடும்பத் தலைவர் பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதலுக்கான விண்ணப்பங்களை பயனாளிகள் கொண்டு வந்தனர். ஆனால் முகாமில் வட்ட வழங்க அலுவ லர்கள் யாரும் வராததால், பயனாளி கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%