" அழகிய முத்தங்கள்
ஒவ்வாமையானது
காதலி மனைவி
ஆன போது .... "
அடித்து பேசிய
கைகள் விளங்கு
போல் பூட்டப்பட்டது ..."
உதைத்து விளையாடிய
கால்கள் அடங்கி
நடமாடியது ..."
பேச்சும் சொல்லும்
தேனாய் இனித்தது
மாறி விஷமானது ..."
துல்லியப் பார்வை
துவண்டு சரிந்தது
அழகிய முகம்
சுருங்கிப் போனது ..."
மாயா ஜாலம்
காட்டிய விரல்கள்
ஆயுதம் தேடத்
துடிக்குது ....."
அன்பு மறைந்து
ஆணவம் பிறந்தது
ஆசை அழிந்து
அலங்கோலமானது ..."
எதிர்ப்பலையும்
கோபமும்
கொந்தளிப்பும்
புரியாத புதிரானது .... "
மயக்கமும்
மெளனமும்
களைந்து
தயக்கமும்
கவலையும் பற்றியது .... "
மோகம் தெளிந்த
புது நோயா
மெளனம் கலைத்த
மன நோயா ...?"
ஆணுக்கு காதல்
மனைவியானால்
மர்மதேசம்
மரணபாசம்..."
காதல் வேலியா
வலியா பெண்
காதலியான
மனைவியா
போராட்டம்
திண்டாட்டம் ..."
- சீர்காழி. ஆர். சீதாராமன்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?