ராமநாதபுரம், அக்.27-
தாய்லாந்தில் நவம்பரில் நடக்கும் மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025 அழகி போட்டிக்கு ராமநாதபுரம் மாவட்ட விவசாயி மகள் தேர்வாகியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூர் தெற்கு காக்கூரைச் சேர்ந்தவர் விவசாயி கஜேந்திரபிரபு. இவரது மகள் ஜோதிமலர் (28) பி.டெக் முடித்து பெங்களுர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவதுடன் மாடலிங் செய்து வருகிறார்.
சமீபத்தில் புனேயில் நடந்த மிஸ் டூரிசம் அம்பாசிடர் ஹெரிடேஜ் இந்தியா 2025 போட்டியில் ஜோதிமலர் பங்கேற்றார். 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் ஜோதிமலர் மிஸ் டூரிசம் அம்பாசிடர் ஹெரிடேஜ் இந்தியா 2025 பட்டத்தை வென்றார்.
இதனைதொடர்ந்து வருகின்ற நவ 28 தாய்லாந்தில் நடைபெற உள்ள ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வதற்காக தேர்வாகி உள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?