மேட்டுப்பாளையம், ஜன. –
மேட்டுப்பாளையம் நகராட்சி அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனத்தில் தைமாத அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் தங்களின் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையவும், அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கவும், தங்களது முன்னோர்களுக்கு பிடித்த காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களை படைத்து திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பொதுமக்கள் அனைவருக்கும் நந்தவனம் சார்பில் டீ, காபி, பிஸ்கட் மற்றும் தயிர் சாதம் வழங்கி உபசரிக்கப்பட்டது.
30-க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் பொதுமக்கள் திதி தர்ப்பணம் கொடுக்க பூஜைகளை செய்தனர். பிண்டங்களை பவானி ஆற்றில் கரைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.
கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நந்தவனத்தில் எந்த வித சிரமமுமின்றி திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவன தலைவர் என்.எஸ்.வி.ஆறுமுகம் தலைமையில், செயலாளர் சுகுமார், பொருளாளர் அருணாச்சல குமார், துணைத்தலைவர் காளியப்ப கவுண்டர், துணைச் செயலாளர்கள் உதயகுமார், அனுமந்த ராவ், இணைச் செயலாளர் பத்திரன் மற்றும் அனைத்து சமுதாய சங்கங்களின் பிரதிநிதிகள், செயற்குழு உறுப்பினர்கள், நந்தவன பணியாளர்கள், சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?