மைசூரு சான்டல் சோப் விளம்பரம்: நடிகை தமன்னாவுக்கு ரூ.6.20 கோடி சம்பளம்
Aug 26 2025
12

பெங்களூரு, ஆக. 24–
‘‘மைசூரு சான்டல்’’ சோப் விளம்பரத்தில் நடிகை தமன்னாவுக்கு ரூ.6.20 கோடி வழங்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடக அரசு சார்பில் ‘‘மைசூரு சான்டல் சோப்’’ தயாரித்து நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த சோப்பின் விளம்பர தூதராக நடிகை தமன்னாவை 2 ஆண்டுகளுக்கு கர்நாடக அரசு ஒப்பந்தம் செய்தது.
கன்னட நடிகைகளை விட்டுவிட்டு பிறமொழி நடிகையை ஒப்பந்தம் செய்வதற்கு எதிர்க்கட்சிகள், கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து கேள்வி மேல் கேள்வி எழுப்பின. ஆனால் அரசு, நமது சோப்பை உலக அளவில் பிரபலப்படுத்த பிரபல நடிகையை விளம்பர தூதராக நியமிப்பது வழக்கம் என விளக்கம் அளித்தது. இந்நிலையில் இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.
மைசூரு சான்டல் சோப்பை விளம்பரப்படுத்தவும், பிரசாரத்திற்காகவும் கடந்த 2 ஆண்டுகளில் அரசு எவ்வளவு செலவிட்டுள்ளது? என பா.ஜ.க. உறுப்பினர் சுனில்குமார் சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.
இதுபற்றி அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் கடந்த 2 ஆண்டுகளில் மைசூரு சான்டல் சோப் விளம்பரம் மற்றும் பிரசாரத்திற்காக ரூ.48 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 350 செலவிடப்பட்டுள்ளது. மேலும் நமது நாட்டிலும், வெளிநாடுகளிலும் சோப்பை விளம்பரப்படுத்த விளம்பர தூதர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நடிகைகள் தமன்னா, இஷானி ஷெட்டி, கன்னட பிரபலங்களான நிமிகா ரத்னாகர், சீனிவாசமூர்த்தி, சானியா ஐயர், ஆராதனா ஆர். ஆகியோரும் விளம்பர தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் தமன்னாவுக்கு ரூ.6.20 கோடியும், இஷானி ஷெட்டிக்கு ரூ.15 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. இதில் கன்னட பிரபலங்களுக்கு ரூ.62 லட்சத்து 87 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது’’ என்று அரசு கூறியுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?