 
    
" ராகுலும் ராஜாவும் மிக்க நல்ல நெருங்கிய நண்பர்கள் , மனதில் ஒளிமறைவின்றி குடும்ப விஷயத்தை பற்றி அடிக்கடி பகிர்ந்து கொள்வார்கள் . "
" ஒரு நாள் மாலை சந்திப்பில் என்னடா வாழ்க்கை ,தினமும் எங்க வீட்டுல போர்க்களமாகவும் , போராட்டமாகவும் இருக்கு என்றான் சலிப்போடு ராகுல் ..."
" ஒரே டல்லா இருக்கே சுனக்கமா பேசறே என்னாச்சு ராகுல் என்று கேட்டான் ராஜா .... "
" மதம் கொண்ட யானை மாதிரி எங்கம்மாவும் , ஜல்லிக்கட்டு காளை மாதிரி என் மனைவியும் தினமும் சண்டை போடறாங்க , என்ன செய்யறதுன்னு தெரியலை நீயே ஒரு வழி சொல்லுடா என்றான் ராகுல்...."
" நான் ஒண்ணும் மகானோ தீர்க்கதரிசியோ இல்லே சாதாரணமானவன் தான் என்றான் ராஜா ...."
" விளையாட்டு போதும்டா நான் நொந்து போயிருக்கேன் எதாவது ஒரு யோசனை உருப்படியா சொல்லுப்பா சண்டை இல்லாமல் நிம்மதியா வாழணும் என்றான் ராகுல் ..."
" அங்குசம் உன்கிட்டே இருக்கும் போது வெளியில எதுக்கு மருந்து தேடறே என்று கேட்டான் ராஜா..."
"புதிர் போடாம விடையை சொல்லுடா ராஜா மனசு கிடந்து தவிக்குது என்றான் ராகுல்..."
" ஒரு குழந்தையை சீக்கிரமா பெத்துக்கோ , உங்கம்மா பாட்டியாகி அக்கறையா குழந்தையை பார்ப்பாங்க , உன் மனைவி குழந்தையை சரியா ஆசையா பார்த்துக்கறதால உங்க அம்மாவோட ராசி ஆகியிடுவாங்க. அப்புறம் உங்க குடும்பம் கலகலப்பு பெட்டகம் ஆயிடும் என்றான் ராஜா ..."
" குடும்ப சண்டையின் மூலக் காரணத்தை தெரிந்த கொண்ட ராகுல் ஆனந்த கண்ணீரில் ராஜாவை அனைத்து தழுவிக் கொண்டான் .
" குழந்தை பிறக்க முழு ஒத்துழைப்பு தருவது அதற்கு பரிகாரம் , மருத்துவ சிகிச்சை என்று மிக வேகமாக செயலில் இறங்கினான் ராகுல் ......."
- சீர்காழி. ஆர். சீதாராமன்.
Related News
Popular News
TODAY'S POLL
 
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
 
                     
                                 
                                                             
                                                             
                                                             
                             
                             
                             
                             
                             
                             
                     
                     
                  
                  
                  
                  
                  
                 