 
    
" தினமும் சேமி
வீணாக்காத காலை
மதியம் இரவு
உணவு ....."
பணம் பழம்
காய்கறி
பெட்ரோல்
டீசல் எண்ணெய் .... "
கைசெலவு
வீண் செலவு
மருந்து மாத்திரை..."
இன்பச் சுற்றுலா
வெளியில் உணவு
பாட்டில் தண்ணீர் ..."
ஒன்று இருக்கும்
இன்னொன்று
என தேவை இல்லாத
செலவு ... "
இளமையில்
சேமிக்க கற்றுக்கொள்
முதுமை இனிக்கும் ..."
சிக்கனம் என்ற
மந்திரச் சொல்லை
கையில் எடு
சேமிப்பு என்ற
உண்டியல் நிறையும் ..."
அன்பை சேமி
உறவை கூட்டு
நட்பை சேர்
கூடி வாழ் ..."
வீடும் நாடும்
செழிக்க சேமிப்பு
தான் மருந்து
சிறுதுளி பெருவெள்ளம்..."
- சீர்காழி. ஆர். சீதாராமன்
Related News
Popular News
TODAY'S POLL
 
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
 
                     
                                 
                                                             
                                                             
                                                             
                             
                             
                             
                             
                             
                             
                     
                     
                  
                  
                  
                  
                  
                 