ரஷ்ய எல்லையில் அமெரிக்க ராணுவ தளங்கள்

ரஷ்ய எல்லையில் அமெரிக்க ராணுவ  தளங்கள்

மாஸ்கோ, ஜூலை 14


டென்மார்க்கிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே அண்மையில் கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து ரஷ்யா கடுமையான கவலைகளைத் தெரிவித்துள்ளது.


டென்மார்க்கிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே அண்மையில் கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்கா ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகில் தனது ராணுவ கட்டமைப்புகளை நிலைநிறுத்த முடியும் என்றும், டென்மார்க்கின் மண்ணில் அமெரிக்கா எந்த வகையான ஆயுதங்களைக் கொண்டுவரும் என்பதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் டென்மார்க்கிற்கு இருக்காது என்றும் டென்மார்க்கிற்கான ரஷ்ய தூதர் விளாடிமிர் பார்பின் எச்சரித்துள்ளார்.


ஜூன் மாதம் டென்மார்க் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த இந்த ஒப்பந்தம், அமெரிக்காவுக்கு டென்மார்க்கில் ராணுவ தளங்களை நிறுவவும், மூன்று டென்மார்க் ராணுவத் தளங்களை அணுகவும் அனுமதிக்கிறது.இதன் பொருள், அமெரிக்கா ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் தனது ராணுவ கட்டமைப்புகளை நிலைநிறுத்த முடியும் மற்றும் டென்மார்க் மண்ணில் இருந்து எங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை உருவாக்க முடியும்" என்று தூதர் பார்பின் தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%