ராஜீவ் காந்தி பிறந்த நாள்: நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி
Aug 21 2025
12

புதுடெல்லி, ஆக. 20–
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் அவரின் படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் இன்று காலை அஞ்சலி செலுத்தினார்கள்.
நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது..இந்த நிலையில் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மூத்த தலைவர்கள் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் ராஜீவ் காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி, ப. சிதம்பரம், கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள மைய மண்டபத்தில் இருக்கும் ராஜீவ் காந்தியின் படத்துக்கு மலர்தூவி இன்று காலை அஞ்சலி செலுத்தப்பட்டது. மக்களவை தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
ராஜீவ் காந்தி பிறந்த நாளில் ராகுல் காந்தி உருக்கமாக சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவில்,
“இந்தியா என்பது ஒவ்வொரு குடிமகனும் மதிக்கப்படுகிற நல்லெண்ணம் இருக்கும் இடத்தில், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பால் வலுவாக நிற்கிறது. அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் வாழ்க்கையின் குறிக்கோள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?