வடை திருவிழாவில் இலவச வடை

வடை திருவிழாவில் இலவச வடை


 சிதம்பரம் தெற்கு வீதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு சீனிவாச ஐயர் என்பவர், தெருவோரத்தில் தள்ளுவண்டியில் வடை வியாபாரம் செய்து வந்தார். அவரது கடையில் வாடிக்கையாளர்கள் வடை வாங்க காத்து கிடப்பது உண்டு. தற்போது அந்த கடை வளர்ந்து, இன்று சண்முகவிலாஸ் என்ற பெரிய சுவிட் மற்றும் பேக்கரி கடையாக மாறி விட்டது. அந்த கடையின் உரிமையாளர் சீனிவாச அய்யர் டிசம்பர் மாதம் முதல் சனிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் சனிக்கிழமை அனறு வடை திருவிழா நடத்தி, பொதுமக்களுக்கு இலவசமாக வடை வழங்கப்படுவது உண்டு. அதன்படி நேற்று முன்தினம் மாலை 6மணி முதல் இரவு 9மணி வரை அவரது கடையில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வடை வழங்கப்பட்டது. 8000 வடைகள் வழங்கப்பட்டதாக கடையின் தற்போதைய உரிமையாளர் கணேஷ் கூறினார். ஒருவர் எத்தனை வடை வேண்டுமனாலும் அதே இடத்தில் சாப்பிட்டனர். ஆனால் பார்சல் எடுத்துபோக அனுமதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%