
வந்தவாசி, ஜூலை 21:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சன்னதி தெரு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஸ்ரீ சிவ சுப்ரமணியருக்கு நேற்று ஆடி மாதம் கிருத்திகை முன்னிட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. மேலும் இரவு ஊஞ்சல் தாலாட்டு வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வந்தவாசி - திண்டிவனம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் கிருத்திகை சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனை நடந்தேறியது.
வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் உள்ள மூல மூர்த்திக்கு அருட்சக்தி ஆறு. லட்சுமணன் ஸ்வாமிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமானோர் பங்கேற்றனர்.
வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள முருகப் பெருமானுக்கு சிறப்பு ஆராதனை வழிபாடு நடந்தேறியது. பங்கேற்ற பக்தர்களுக்கு விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பா. சீனிவாசன் வந்தவாசி.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?