
வாசக சொந்தங்கள் அனைவர்க்கும் வணக்கம். இன்றைய (20.07.2025) இ இதழ் படைப்புகள், செய்திகள் குறித்து :
2006ல் அறிமுகமான காலிபரி எழுத்துரு 2002 ன் ஆவணத்தில் சாத்தியமில்லை என்ற A I தொழில்நுட்பத் தீர்ப்பு,
மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன்,
செல்வந்தராக விளங்கும் நடிகை நளினி அவர்கள் மடிப் பிச்சை ஏற்ற ஆன்மீகப் பற்று,
மராட்டியத்தில் இஸ்லாம்பூர், ஈஸ்வர்பூர் ஆக பெயர் மாற்றம் பெற்றது,
கான் அப்துல் கபார் கானின் அஞ்சலியில் இரண்டு லட்சம் பேர் கலந்து கொண்டதும், ஆப்கன் உள்நாட்டுப் போர் நிறுத்தப் பட்டதும் குறித்த வியப்புக்குரிய தகவல்,
திரு. ராகுல் காந்தி அவர்களின், போர் விமானங்களின் சேதம் குறித்து திரு. மோடி அவர்களை நோக்கி எழுப்பிய கேள்வி,
போன்றவை இன்றைய கவனம் ஈர்த்த செய்திகளில் சிறப்பானவை.
கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம் 1100 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என்பதையும், மற்றும் அங்கு ஒலித்த சிம்ம கர்ஜனையையும் குறிப்பிட்ட திரு. நடேஷ் கன்னா அவர்களின் விரிவான கட்டுரை நல்லதொரு தகவல் களஞ்சியம்.
வழக்கம்போல் அனைத்து கவிதைகளும் ரசனைக்கு உகந்ததாக இருக்கின்றது. அவற்றுள் உறையூர் திரு. அனந்தராமன் கவிதை மிக அற்புதம்.
திரு. இரா. இரவி அவர்களின் வரிகள் "தமிழா! தமிழைத் தமிழாகப் பேசு. தமிழா! தமிழைத் தமிழாக எழுது" என்பது சரியான சாட்டை அடி.
இன்றைய ஜோக்ஸ் எல்லாமே சூப்பர் ரகம் தான்.
பத்திரிக்கை படிப்பவர்களுக்கு மிகப் பரிச்சயமான பெயர் அரவக்குறிச்சி அசோக் ராஜா. அவரது படைப்பை இப்போதுதான் முதன் முறையாக இந்த இ இதழில் நான் பார்க்கிறேன். வெல்கம் சார். தரமான படைப்புகள் தொடரட்டும்.
இறுதியாக சொல்ல வேண்டியது. ஒரே பதிவு மீண்டும் மீண்டும் பிரசுரமாவது.
சறுக்கலை சரி செய்யலாமே.நன்றி.
P. கணபதி
பாளையங்கோட்டை.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?