அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்ற சிவராமன் பிரிவு உபசார விழா முடிந்து தன் காரிலேயே தனியாக வீடு வந்து சேர்ந்தார். சந்தன மாலை மற்றும் செக் வைத்திருந்த ரெக்ஸின் பேகை டீபா மீது வைத்து விட்டு சோர்வோடு சோஃபாவில் அமர்ந்தார்.
நேற்றுதான் வேலைக்கு சேர்ந்தாற்
போல் இருந்நது. அதற்குள் முப்பதெ
ட்டு வருடம் ஓடிவிட்டதை எண்ணி
ஆச்சரியம் கொண்டார். எந்த வித
கரும் புள்ளியும் இல்லாமல் ஓய்வு
பெறுவது என்பது சாதாரண விஷய மல்ல. அதுவும் ஓர் இரு சமயங்களில்
நெருக்கடி உண்டாகி லாவகமாக கை
யாண்டு விஷயம் சுமூகமாக முடிந்த
தில் பெருத்த ஆயாசம் கலந்த நிம்
மதி ஏற்பட்டதும் சிவராமன் நினைவு
க்கு வந்தது. சிலிர்த்துக் கொண்டார்.
" வாப்பா ! ஒரு வழியா வேலையி லிருந்து ரிடையராகிட்டே! "
" ஆமாம்மா ! நேற்றே உன் கிட்டச்
சொல்லியிருந்தேனே நான் இன்
னிக்கு ரிடையர் ஆகப் போறதைப்
பற்றி..."
" ம்.சரி, நீ ரிடையராகிட்டே. நாளை யிலேர்ந்து பொழுது போக என்ன செய்யப்போறே?”
“ ஃப்ரெண்ட்ஸ் வீடு இருக்கு. லைப்ரரி இருக்கு. ஏன் டிவி கூட இருக்கு. போ தாக்குறைக்கு பேச்சுத் துணைக்கு நீ இருக்கே. வேற என்னம்மா வேணும் ?"
" ம்..அதெல்லாம் சரிதான். ஒரு விஷயத்தை மறந்துட்டியே !"
" எதும்மா ?"
" இல்ல 60 வயசாகியும் நீ கட்டை பிரம்மச்சாரியாகவே காலம் தள்ளிட்டே. கல்யாணம்னு ஒண்ணு நடந்திருந்தா, இந்த வயசில பேரன் பேத்தி இருக்கும் . அதுங்களோட நீ கொஞ்சி விளையாடலாம். உனக்கு நல்லா பொழுதும் போகும். ஹும்!
அதுக்கு வழியில்லாமல் போச்சே
ன்னு வேதனையா இருக்குடா !"
" என்னம்மா நீ ! எனக்குப் பிடிக்காத விஷயம் பற்றி பேசாதேன்னு உனக்கு எத்தன தடவை சொல்லியிருக்கேன்!
திருப்பி திருப்பி அதைப் பற்றி நீ பே
சறயே?" கோபத்துடன் சொன்னார் சிவராமன்.
" நீ சுலபமா சொல்லிட்டே. வம்சாவளி உன்னோடயே முடிஞ்சிடப் போறதே ன்னு நினைச்சு வேதனையும் ஏக்க முமா இருக்குடா!பெத்த வயிறு பத்திக் கிட்டு எரியறது . நீ என்னம்மோ வியா க்யானம் பேசறே !"
“ சரி, முடிஞ்சு போன சமாச்சாரம் ! இதோபாரும்மா ! இனிமேல் இது விஷயமா நீ வாயைத் திறந்தால் நான் உன்னோடப் பேசவே மாட்டேன் …” கண்டிப்புடன் கூறினார் . அதற்கு மேல் அம்மா வாயைத் திறக்கவி ல்லை.
அதே நேரம் வீட்டினுள் ஆள் நுழையும் காலடி சப்தம் கேட்டது.
" சரி.. சரி யாரோ வர்றமாதிரி இருக்கு ! நாம அப்புறமா பேசலாம்.." மாலையோடு படத்திலிருக்கும் தன் அம்மாவுடன் வழக்கம் போல் மானசீகமாக பேசிய சிவராமன் அதோடு உரையாடலை முடித்துக் கொண்டார். ஆனால் தெய்வமாகி விட்ட அம்மா கூறியது போல் முதல்
முறையாக வம்சாவளி பற்றிய கவலை மனதில் தோன்றஆரம்பி த்தது ! அதோடு தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது எத்தனை பெரிய தவறு என்பதையும் உணர்ந்தார். படத்தைப் பார்க்க எப்போதும் போல் அம்மா அதே
புன்னகையுடன் காட்சி தந்து கொ
ண்டிருப்பது கண்டு சிவராமன் கண்
களில் நீர் திரையிட்டது . சட்டென
துடைத்துக் கொண்டார் கண்களை !

வி.கே.லக்ஷ்மிநாராயணன்
…………………………………………….