வரதட்சணை கொடுமை: மகளுடன் தீக்குளித்து ஆசிரியை தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

வரதட்சணை கொடுமை: மகளுடன் தீக்குளித்து ஆசிரியை தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

ஜெய்ப்பூர்,


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் சர்நடா கிராமத்தை சேர்ந்தவர் திலீப் பிஷோனி. இவருக்கும் சஞ்சு பிஷோனி என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 வயதில் யாஷ்வி என்ற மகள் இருந்தார். பிட்கன்சி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சஞ்சு ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இதனிடையே, சஞ்சுவுக்கும் அவரது கணவர் திலீப்பிற்கும் இடையே குடும்ப பிரச்சினை நிலவி வந்தது. மேலும், சஞ்சுவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது மாமனார், மாமியார் கடந்த 5 மாதங்களுக்குமேல் தொல்லை கொடுத்து வந்தனர்.


இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கூடுதல் வரதட்சணை கேட்டு மீண்டும் மாமனார். மாமியார் தொல்லை கொடுத்துள்ளனர்.


இதனால் விரக்தியடைந்த சஞ்சு தனது மகளுடன் வீட்டில் உள்ள அறைக்கு சென்றுள்ளார். அங்கு தான் வைத்திருந்த பெட்ரோலை தன் மீதும் மகள் மீதும் ஊற்றி தீக்குளித்தார். இந்த சம்பவத்தில் மகள் யாஷ்வி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். சஞ்சுவின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சஞ்சு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%