வருமானத்திலும் சமத்துவம்! இந்தியா தொடர் முன்னேற்றம் - உலக வங்கி தகவல்!
Jul 07 2025
148

உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாகக் கொண்டாடப்படும் இந்தியா, தற்போது மற்றொரு மைல்கல்லையும் எட்டியுள்ளது. வருமானத்தில் சமத்துவம் என்ற அடிப்படையில் மற்ற நாடுகளைவிட இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
வருமானத்தில் சமத்துவத்தைக் குறிக்கும் குறியீடான கினி (Gini) மதிப்பெண்கள், இந்தியாவுக்கு 25.5 என்ற நிலையில் உள்ளது. ஆனால், அமெரிக்காவில் 41.8 என்றும், சீனாவில் 35.7 என்றும் உள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து நூறு வரையில் மதிப்பிடப்படும் கினியானது, 100 என்ற நிலையில் இருந்தால், அது தீவிர சமத்துவமின்மையைக் குறிக்கும். அதுமட்டுமின்றி, ஜி7 மற்றும் ஜி20 நாடுகளைவிடவும் இந்தியா முன்னணியில் உள்ளது.
இருப்பினும், முதலிடத்தில் 24.1 சதவிகிதத்துடன் ஸ்லோவாக் குடியரசும், இரண்டாம் இடத்தில் 24.3 சதவிகிதத்தில் ஸ்லோவேனியாவும், மூன்றாம் இடத்தில் 24.4 சதவிகிதத்துடன் பெலாரஸும் உள்ளது. அதற்கு அடுத்ததாக, நான்காம் இடத்தில் 25.5 சதவிகிதத்துடன் இந்தியா உள்ளது.
இதன் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மக்களுக்கு பயனளிப்பதை உறுதி செய்வதைக் காட்டுகிறது.
2011-ல் 28.8-ஆக இருந்த இந்தியாவின் கினி, 2022-ல் 25.5 என்று உயர்ந்துள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் வருமான இடைவெளிகளைக் குறைப்பதைக் காட்டுகிறது.
2011 - 23 இடையில் 17.1 கோடி இந்தியர்கள், தீவிர வறுமையிலிருந்து மீட்கப்பட்டதாக உலக வங்கி தெரிவித்தது. 2011-ல் 16.2 சதவிகிதமாக இருந்த நிலையில், 2022-ல் 2.3 சதவிகிதமாகக் குறைந்தது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?