வருமான வரி கணக்கில் பணத்தை திரும்பப் பெறும் முறையில் மாற்றம்: நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்
Jul 24 2025
13

புதுடெல்லி, ஜூலை.22-–
அறக்கட்டளை நன்கொடை மற்றும் தனிநபர் வருமான வரி கணக்கில் பணத்தை திரும்ப பெறும் முறையில் மாற்றம் பரிந்துரைக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
2025-ம் ஆண்டு வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மக்களவையின் தேர்வுக் குழுவின் தலைவரான பா.ஜ.க. எம்.பி. பைஜயந்த் பண்டா, மக்களவையில் நேற்று அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் 60 ஆண்டுகளாக நடை முறையில் உள்ள 1961-ம் ஆண்டு வருமான வரி சட்டத்தில், பல்வேறு மாற்றங்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதில் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் வருமாறு:-– லாபநோக்கமற்ற மத-தொண்டு நிறுவனங்கள் தங்கள் நன்கொடைகளுக்கு வரி விதிப்பதில் உள்ள தெளிவின்னைமையை நீக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அந்த நிறுவனங்களின் ரசீதுகளுக்கு வரிவிதிப்பதை தவிர்த்து, நிகர வருமானத்துக்கு மட்டும் வரி விதிக்கப்படும் வகையில் திருத்தம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
பதிவு செய்யப்பட்ட லாப நோக்கமற்ற நிறுவனங்களால் பெறப்படும் நன்கொடைகளில், மத மற்றும் தொண்டு அறக்கட்ட ளைகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. மத நோக்கமற்ற நிறுவனங்களால் பெறப்படும் நன்கொடைகளுக்கு 30 சதவீத வரி முன்மொழியப்பட்டு உள்ளது.
அதேபோல வரி அறிக்கைகளை தாக்கல் செய்ய தேவையில்லாத தனிநபர்கள், வரிக் கழிவில் பணத்தை திரும்ப பெறுவதற்கான கோரிக்கைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக வருமான வரி மசோதாவில் உள்ள விதியை நீக்க குழு பரிந்துரைத்தது. இது தனிநபர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதை கட்டாயமாக்குகிறது.
பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நோக்கத்துக்காக மட்டுமே வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய தற்போதைய கட்டாயத் தேவையை இது தவிர்க்கிறது.
எனவே உரிய நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்யப்படாத சந்தர்ப்பங்களில் பணத்தை திரும்பப்பெறும் கோரிக்கையை அனுமதிக்கும் நெகிழ்வுத் தன்மையை வழங்க இந்த குழு பரிந்துரைத்து உள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?