வலங்கைமானில் திமுக, சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள், சிபிஐ ( எம் எல்) அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
வலங்கைமானில் திமுக, சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள், சிபிஐ ( எம் எல்) அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள திமுக பேரூர் அலுவலகத்தில் திமுக, சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள், சிபிஐ (எம் எல்) அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ. அன்பரசன் தலைமையில், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் கோ.தெட்சிணாமூர்த்தி முன்னிலையில் பேரூர் திமுக செயலாளர் பா.சிவநேசன், வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க.தனித்தமிழ்மாறன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக் குழ ரெங்கராஜன், ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.செந்தில்குமார், சிபிஎம் ஒன்றிய செயலாளர் இளங்கோவன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஆர்.சேகர், சிபிஐ நகர செயலாளர் ராதா உள்ளிட்ட தோழமை கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியதையும், தமிழக அரசு 40 சதவீதம் நிதி அளிக்க வேண்டும் என்பதை கண்டித்தும் வருகிற 24.12 2025 அன்று நடைபெறக்கூடிய ஆர்ப்பாட்டத்தின் முன் அதற்கான ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற 23.12.2025 ஆம் தேதி ஆட்டோ மூலம் ஒன்றியம் முழுவதும் ஒலி பெருக்கி மூலம் பிரச்சாரம் செய்வது, ஆர்ப்பாட்டத்தில் வலங்கைமான் ஒன்றியம் சார்பில் 5000 பொதுமக்களை ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?