வலங்கைமானில் திருட்டு: 3 பேர் கைது

வலங்கைமானில் திருட்டு:  3 பேர் கைது

திருவாரூர், ஆக.14 -

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட கைலாசநாதர் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி சரஸ்வதி (56). இவர் கடந்த ஜூலை 19 அன்று வீட்டில் வழக்கம் போல் உட்கார்ந்து இருந்த போது, முகவரி கேட்பது போல் வந்த மூன்று நபர்கள் அவர் அணிந்திருந்த 21.5 கிராம் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பித்தனர். அதேபோன்று வலங்கைமானை அடுத்த ஆதிச்சமங்கலம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் மனைவி கிரிஜா (64) என்பவர் வலங்கைமான் கடைவீதிக்கு சென்று விட்டு கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் முகவரி கேட்பது போல் அவர்களது கவனத்தை திசை திருப்பி, கிரிஜா அணிந்திருந்த 47 கிராம் பவுன் தாலிச் சங்கிலிகளை பறித்து விட்டு சென்று விட்டனர். இந்த இரு வேறு சம்பவங்கள் குறித்து வலங்கைமான் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து வலங்கைமான் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தாராசுரம் எலுமிச்சங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (25), அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் (27), தாராசுரம் கம்மாளர் தெரு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (25) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து இரு பெண்களிடமிருந்து பறித்த தங்க சங்கிலிகள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%