அன்புடையீர்
வணக்கம். 6/8/25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் உத்தரகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு மழையினால் பலரின் உயிரிழப்பு என்ற செய்தி வேதனை அளித்தது. இன்றைய பஞ்சாங்கம் மிக அருமையான நாளாக எனக்கு உதவியது.
நல்ல தெளிவான விளக்கத்துடன் இன்றைய திருக்குறளை படித்து மனம் மகிழ்ந்தேன். மாரியம்மன் கோவிலில் ஆடிப் பொங்கல் திருவிழா படமும் செய்து மிகவும் அருமை. சேலத்திற்கு என்னை கொண்டு சென்று கோட்டை மாரியம்மன் தரிசித்த ஒரு மனதிருப்தியை கொடுத்தது. மனமார்ந்த பாராட்டுக்கள். விழுப்புரம் மாவட்டத்தில் கடம் புறப்பாடு என்ற செய்தி புதுமையாகவும் அருமையாகவும் இருந்தது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
ஆப்பிள் பீட்ரூட் கேரட் என்ற ABC ஜூஸினை தினமும் குடிப்பதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்று நலம் தரும் மருத்துவத்தில் தெரிந்து கொண்டேன். மனம் நிறைந்த பாராட்டுக்கள். வேலூர் மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளில் 18,035 பேருக்கு வீட்டு மனை பட்டா என்ற செய்தி மகிழ்ச்சியாக இருந்தது.
தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு சிலை என்ற தமிழக அரசு முடிவு செய்தது மிக அருமையான தகவல். பாராட்டுக்கள் 6 -10-ம் வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடநூல் பள்ளி கல்வித்துறை வெளியீடு மிகவும் அருமையான தகவல். பாராட்டுக்கள்.
தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் இன்று சர். சேத்தூர் சங்கன் நாயர் பற்றிய தகவல் மிகவும் அருமை. வரலாற்று புகழ்மிக்க தலைவர்களைப் பற்றி இந்த பக்கத்தில் தெரிந்து கொள்வது ஒரு பூரிப்பை அடைய செய்வது தான் உண்மை.
பல்சுவை களஞ்சியம் பக்கத்தில் வந்த வெள்ளி மலை பற்றி மிக அருமையான தகவல் பூரிப்புடன் படிக்க வைத்தது. ஜோக்ஸ் பலமுறை படித்து சிரிக்க வைத்தது மனமார்ந்த பாராட்டுக்கள்.
நெல்லை மாவட்டத்தில் 140 ஆவது ஆண்டு திருவிழாவில் அலங்கார தேர்பவனி மிகவும் அருமையான கண் கொள்ளா காட்சியாக இருந்தது. மனம் நிறைந்த பாராட்டுக்கள். சங்கரன்கோவிலில் ஆடித்தவசு விழாவை முன்னிட்டு தேரோட்டம் என்ற மக்கள் வெள்ளத்தைப் பார்த்து மகிழ்ந்தேன்.
சுற்றுலா பக்கத்தில் மழைக்காலத்தில் நாம் எந்த இடங்களை பார்க்கலாம் என்று பட்டியலிட்டு சொன்னது மிகவும் அருமை. மனம் நிறைந்த பாராட்டுக்களும் நன்றியும். வேலைவாய்ப்பு காரணம் நல்ல தகவலை அழகாக சொன்னது.
நம் பாரதப் பிரதமரின் வங்கி சேவை திட்டங்கள் முகாம் என்று 30 நாட்களில் 4 லட்சம் விண்ணப்பங்களுக்கு தீர்வு செய்தது மிகவும் அருமையான சந்தோஷமான செய்தி. சொத்துப்பதிவில் ரொக்க பரிவர்த்தனை சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை அறிவுறுத்தல் என்ற செய்தி நல்ல தகவல் பாராட்டுக்கள்.
.குடும்பத்தினர் சம்மதிக்காத காதல் திருமணங்களுக்கு தடை விதித்த பஞ்சாப் கிராமம் என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. இந்த காலத்தில் எல்லோருமே காதல் திருமணம் செய்து கொள்ளும்போது குடும்பத்தினர் சம்பந்தத்தை எப்படி எதிர்பார்ப்பார்கள் என்று ஒரு வினாவை எழுப்பிய செய்தி.
வரிகளை கணிசமாக உயர்த்துவேன் என்று இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் எச்சரிக்கை விடுத்த செய்தி அதிர்ச்சியுடன் படிக்க வைத்தது. உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு இந்தியா நிதி உதவி செய்கிறது என்று அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டுவதை படித்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது.
அள்ள அள்ளக் குறையாத ஆர்வத்துடன் படிக்க வைக்கும் தமிழ்நாடு இ பேப்பரின் ஒவ்வொரு பக்கமும் அருமைரஇதனை மிக சிறந்த முறையில் தயாரிக்கும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
நன்றி
உஷா முத்துராமன்