வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி) 06.08.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி) 06.08.25


எலும்பும் தோலுமாக இருக்கும் இஸ்ரேலிய பணைய கைதி ஒருவரின்

படத்தை ஹமாஸ் வெளியிட்டு இருக்கிறது.

அந்தப் படத்தைப் பார்த்த இஸ்ரேலியர்கள் தங்கள் பிரதமர் மேல் கடும் கோபம் கொண்டுள்ளனர். 


எனவே

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை இதில் தலையிட்டு பணைய கைதிகளுக்கு போதுமான அளவுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை செய்யுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டிருக்கிறது.


ஆனால் பட்டினியாவில் இறந்து கொண்டிருக்கும் பாலஸ்தீனிய மக்களுக்கு உலக நாடுகள் அனுப்பும்

நிவாரணப் பொருட்களை தங்கு தடை இன்றி வழங்குவதற்கு இஸ்ரேல் அனுமதித்தால் மட்டுமே 

இஸ்ரேலிய பணைய கைதிகளுக்கு செஞ்சிலுவை சங்கம் உதவுவதற்கு அனுமதிப்போம் என்று ஹமாஸ் நிபந்தனை விதித்துள்ளது.


பட்டினியால் சாகும் மனிதரில் இஸ்ரேலியர் என்ன பாலஸ்தீனியர் என்ன ? அனைவரும் மனிதர்களே என்ற இரக்க சுபாவம் இஸ்ரேலிடம் இன்னும் வளரவில்லை. 


பாலஸ்தீனிய குழந்தைகள் பல்லாயிரம் பேரை படுகொலை செய்து கொண்டு இருக்கிறது இஸ்ரேல். 


இந்த குழந்தைகள் வளர்ந்து அவர்களில் கொஞ்சம் பேர் போராளிகளாக மாறினால்

என்ன செய்வது என்று இஸ்ரேல் பயப்படுவது புரிகிறது. 


ரஷ்யாவிடம் இருந்து பொருட்கள் கொள்முதல் செய்தால் இந்திய பொருட்களுக்கு வரியை உயர்த்துவேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளை போல் கூறிக் கொண்டிருக்கிறார்.


தன்னை உலகத்தின் எஜமானனாக அவர் எண்ணிக் கொண்டிருக்கிறார். 

அவரது நடவடிக்கைகள் பைத்தியக்காரத்தனமானவை என்று அமெரிக்கர்களில் பலரும் நினைக்கிறார்கள்.


ஒரு காலகட்டத்தில்

பொறுக்க முடியாத அமெரிக்க மக்கள் தங்கள் அதிபருக்கு எதிராக வெகுண்டு எழுந்து போராடினால் அவரது நிலை கேள்விக்குறியாகிவிடும் என்பதை அவர் மறந்து விடுகிறார்.


மதுரையில் கஞ்சா கடத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுவது

கவலையை அளிக்கிறது.

மூன்று நாட்களில் 24 பேர்கள் பிடிபட்டு இருக்கிறார்கள்.


இவர்களை அலட்சியமாக விட்டால், " கஞ்சா விற்போர் சங்கம் " மற்றும் " கஞ்சா உபயோகிப்பாளர் சங்கம் " 

தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


வெ.ஆசைத்தம்பி 

தஞ்சாவூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%