வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 07.09.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 07.09.25


அன்புடையீர் 


 வணக்கம், 7/9/25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் ரஷ்ய உக்கிரன் போரை நிறுத்துவதில் தோல்வி என்ற டொனால்ட் டிரம்ப் அவர்களின் பேச்சினை படித்து உலகச் செய்திகளை தெரிந்து கொண்டேன். இன்றைய பஞ்சாங்கம் மிக நல்ல நாளாக அமைய எனக்கு உதவியது மிகவும் நன்றி 


திருக்குறளை அதன் பொருளுடன் படித்து ரசித்து மகிழ்ந்தேன் மனம் நிறைந்த பாராட்டுக்கள். மதுரை புத்தகத் திருவிழா படமும் காட்சியும் மிகவும் அருமை செல்ல வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது.


நலம் தரும் மருத்துவம் பகுதியில் உடலுக்கு நலம் தரும் ஆரோக்கிய உருண்டை என்று கேழ்வரகு மாவில் நல்ல உருண்டைகளை செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ உதவிய தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


கொடைக்கானலில் உள்ள மன்ன வனூர் ஆட்டுப் பண்ணை மூடியதால் அங்கு பயணிகள் பார்க்க முடியாது என்ற செய்தி சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு ஏமாற்றமாக இருக்கும். உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் என்று பட்டியலை படித்தவுடன் அரசியலில் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் இன்று மரகதம் சந்திரசேகர் அவர்கள் கருப்பு வெள்ளை புகைப்படமும் செய்திகளும் அறிவுக்கு விருந்தாக இருந்தது. நல்ல நல்ல தலைவர்களின் செய்திகளை மிக அழகாக தொகுத்து கொடுக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


களைக் கட்டும் வாசகர் கடிதம் பக்கம் இரண்டும் மிகவும் அருமை படிப்பதற்கே அருமையாகவும் பெருமையாகவும் உள்ளது.


பல்சுவைக் களஞ்சியம் பகுதி ஆர்வமுடன் படிக்க வைத்தது விடுகதை மிகவும் கடினமாக விடைகளை கண்டுபிடிக்க வைத்து விட்டது. இருந்தாலும் அறிவுக்கு விருந்தாக இருந்ததால் ஆசையுடன் கண்டுபிடித்து விட்டேன். ஜோதிடம் அறிவோம் பகுதியில் சந்திர கிரகணம் பற்றி மிக அருமையான தகவல்களை சொன்னது பாராட்டுக்குரியது.


ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் ஆறாம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என்ற செய்தி மிக அருமையான தகவலாக எண்ணி படிக்க வைத்தது.


சுற்றுலா பக்கத்தில் வந்த தமிழ்நாட்டில் சிறந்த நீர் விளையாட்டு இடங்கள் என்ற செய்தி மிகவும் அருமை. பயனுள்ள தகவல் பயணம் சொல்பவர்களுக்கு மிகவும் அருமையாக உபயோகத்தில் இருக்கும் இந்த வார ராசிபலன் மிகவும் அருமை மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கன மழை என்று 12ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என்ற செய்தி நல்ல தகவல். மழை பெய்து நாடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்தேன் .


ஜிஎஸ்டி வரி குறைப்பதால் இந்திய பொருளாதாரத்தை அது முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் என்ற அஸ்வினி வைஷ்ணவி அவர்களின் தகவல் படிக்கும்போது ஆர்வமுடன் படிக்க வைத்தது.


அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொண்ட நாடுகளுக்கு வரி விலக்கு என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் கையெழுத்திட்ட செய்தி அமெரிக்காவில் நடப்பதை கண் முன்னே கொண்டு வந்து காட்டியது.


ஞாயிறு என்ற மலர் வாசத்துடன் எனக்கு வீச நல்ல அழகான செய்திகளை விடியற் காலையிலயே கொடுத்து உற்சாகமாக நாளினை தொடங்க உதவிய தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 


நன்றி 

உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%