வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 16.07.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 16.07.25

வாசகர் கடிதம் பகுதி 


அன்புடையீர்,


வணக்கம் 16. 7.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர். காம் முதல் பக்கத்தில் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய ஷுபாஷு சுக்லா பற்றி படித்தும் பெருமையாக இருந்தது. படம் பார்த்ததும் அவரையே நேரில் பார்ப்பது போல ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது. இன்றைய பஞ்சாங்கம் நல்ல நாளாக இருக்க எனக்கு உதவியது மனமார்ந்த பாராட்டுக்கள்.


திருக்குறள் மிகவும் அருமை பொருளுடன் படித்து மனம் மகிழ்ந்தேன். பள்ளி தமிழாசிரியர்களுக்கான மொழிகள் நுணுக்க பயிற்சி மிகவும் அவசியமான ஒன்று என்று உணர்ந்து படிக்க வைத்தது.


நலம் தரும் மருத்துவம் பகுதியில் வந்த நெய் உடலுக்கு நல்லதா கெட்டதா மருத்துவர் கொடுத்த விளக்கத்தை படித்ததும் மிகவும் நல்ல தகவல். இதனால் நெய் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது. மனமார்ந்த பாராட்டுக்கள். 


திண்டலில் 186 அடி உயர முருகன் சிலை அமைக்கும் திட்டம் அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் முத்துசாமி அவர்கள் ஆய்வு செய்தது மிகவும் அருமையான தகவல். நாகை மீனவர்களுக்கு கை கொடுத்த நெத்திலி மீன் என்ற செய்தியை படித்தது மீனவர்கள் இதனால் மகிழ்ச்சி அடைவார்கள் என்று தோன்றியது.


தினம் ஒரு தலைவர்கள் பகுதி உண்மையிலேயே மிகவும் அருமையான பகுதியாக உள்ளது. அதில் இன்று வந்த கமலா சட்டோபாத்தியாயா அவர்களின் வரலாறை படித்ததும் கல்லூரியில் படித்த அந்த நாட்கள் நினைவில் வந்தது.


பல்சுவை களஞ்சியம் பகுதி மிகவும் அற்புதம். மீம்ஸ் ஜோக்ஸ் விடுகதை என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான ஜோக்ஸ்களை கொடுத்து மனமகிழ் செய்யும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


பதினாறாம் பக்கத்தில் வந்த அனைத்து செய்திகளும் அற்புதம் அரசியல் ஆன்மீகம் கூட்டங்கள் என்று படங்களுடன் செய்திகளை படிக்கும் போது மனமகிழ்ச்சியாகவும் மன நிறைவாகவும் உள்ளது தான் உண்மை.


சுற்றுலா பக்கத்தில் வந்த மறையூர் தங்குதல் பேஸ் கேம்ப் சாகசங்கள் என்ற செய்தி புதுமையான செய்தியாக ஒரு காவலுடன் படிக்க வைத்தது.


மதுரையில் செப்டம்பர் 4 ஆம் தேதி மாநாடு என்று ஓபிஎஸ் அவர்களின் அறிவிப்பை படித்ததும் அரசியல் தேர்தல் எல்லாம் ஜருவராக நடக்க தொடங்கி விட்டது என்று எண்ண வைத்தது.


விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட பயணிகள் இதனால் டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது என்ற செய்தி அதிர்ச்சியாக படிக்க வைத்தது.


உக்ரைன் மீதான போரை 50 நாட்களுக்குள் நிறுத்தவில்லை என்றால் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்க ட்ரம்ப் அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்ததை படித்ததும் உலகப்போர் இதனாலாவது நின்று மன அமைதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ண வைத்தது.


அனைத்து பக்கங்களும் அருமையான செய்திகளை படித்து காலையில் உற்சாகத்துடன் தொடங்க உதவிய தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 


நன்றி 


உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%