அன்புடையீர்,
வணக்கம் 20.7.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் கருணாநிதி அவர்களின் மூத்த மகன் மு.க. முத்து அவர்கள் காலமானார் என்ற செய்தி வருத்தமாக இருந்தது. அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்தேன். இன்றைய பஞ்சாங்கம் நல்ல நாளாக எனக்கு அமைய உதவியது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
325 நாட்களாக வரும் திருக்குறளும் அதன் பொருளும் அற்புதம். எத்தனை முறை படித்தாலும் ஒரே மாதிரி உணர்வினை கொடுக்கும் ஒரு அருமையான செய்யுள் என்றால் அது திருக்குறள்தான். அந்தப் பக்கத்தில் வந்த ஆன்மீக தகவல்களும் அரசியல் தகவல்களும் மிகவும் அருமை பாராட்டுக்கள் ..
நலம் தரும் மருத்துவம் பகுதியில் மைதா உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் ஏற்படும் என்னென்ன பிரச்சனைகள் என்று மிக அழகாக தெளிவாக சொன்னது ஒரு விழிப்புணர்வை தந்தது. மன நிறைந்த பாராட்டுக்கள் காவல்துறை நடத்தை விதிமுறைகளை மீறியதாக புகார் என்று டி எஸ் பியை சஸ்பெண்ட் செய்ய டிஐஜி பரிந்துரை செய்தது மிகவும் நல்ல தகவல் பாராட்டுக்கள் ..
மதுரையில் விளம்பர நிறுவனங்களே திருவிளக்குகளை நிறுவி பராமரிக்கும் திட்டம் நல்ல திட்டம் இதனால் தெருக்களில் எப்போதும் வரும் வெளிச்சமாக இருக்கும். பீகாரில் தாக்கி கடந்த இரண்டு நாட்களில் 34 பேர் உயிரிழப்பு என்ற செய்தி வேதனை அளித்தது.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் கான் அப்துல் கப்பார் கான் அவர்களின் வரலாறும் சரித்திரமும் மிகவும் அருமையாக இருந்தது. நல்ல நல்ல தகவல்களை தலைவர்கள் என்ற பெயரில் எங்களுக்கு அறிவுக்கு விருந்தளிக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
பல்சுவைக் களஞ்சியம் பகுதி மிகவும் அருமையாக இருந்தது நல்லா யோசிச்சு பாருங்க என்று தகவல் மிகவும் அருமை. மீம்ஸ் பலமுறை பார்த்து சரி சிரிக்க வைப்பது ஜோதிடம் அறிவோம் பகுதியில் வந்து அனைத்து தகவல்களும் மிகவும் அருமை பாராட்டுக்கள் .
பதினாறாம் பக்கத்தில் படங்களுடன் செய்திகளை படிக்கும் போது மிகவும் அருமையாக இருந்தது. ஒரு தொலைக்காட்சியின் முன் அமர்ந்து செய்திகள் கேட்பது போல ஒரு உணர்வைகளை கொடுப்பது உண்மை.
இந்த வார ராசிபலன் மிகவும் அருமை எப்படி நம்முடைய நாட்கள் இருக்கும் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.
சுற்றுலா பக்கத்தில் வந்த ராமேஸ்வரத்தில் அழகிய கடற்கரை அக்னி தீர்த்தம் என்ற செய்தி மிகவும் அருமை பாராட்டுக்கள்.
விவசாயிகள் கடன் பெற முடியாமல் தவிக்கவிடும் சிபில் ஸ்கோர் நிபந்தனை என்ற செய்தியை வேதனையை அளித்தது. க்ரைம் கார்னர் மிகவும் நல்ல தகவல்களை அழகாக சொன்னது பாராட்டுக்குரியது.
ரூபாய் 3200 கோடி மதுபான ஊழல் வழக்கில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்யா கைது என்ற தகவல் அதிர்ச்சியாக இருந்தது
கடைசி பக்கத்தில் அமைதி பேச்சு வார்த்தைகள் முடுக்கி விடப்பட வேண்டும் என்பதில் உக்லைனுடன் உடன்படுகிறேன் என்ற புத்தின் அவர்களின் பதில் உலக நடப்பை கண் முன்னே கொண்டு வந்து காட்டியது.
20 பக்கங்களிலும் அருமையான செய்திகளை அழகாக தொகுத்துக் கொடுத்து ஞாயிறு அன்று கூட சுறுசுறுப்பாக நாளிதழ் படிக்க வேண்டும் என்று ஆர்வத்தினை உண்டாக்கும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி
உஷா முத்துராமன்