அன்புடையீர்
வணக்கம் 27 .7. 25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்த நடவடிக்கை என்ற நம் பிரதமர் மோடிஜி அவர்களின் பேச்சு ரசிக்க வைத்தது இன்றைய பஞ்சாங்கம் மிக நல்ல நாளாக அமைய எனக்கு உதவுவது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அற்புதமான திருக்குறளை பொருளுடன் படித்து மகிழ்ந்தேன் மனமார்ந்த பாராட்டுக்கள் ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை துர்க்கை பூஜை ராஜ மாதங்கி பூஜை குத்துவிளக்கு பூஜை என்று திருவண்ணாமலையில் நடந்த மிக அருமையாக படத்துடன் பார்த்ததும் பரவசமாக இருந்தது.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வைகோ அவர்களுக்கு பாராட்டும் கமலஹாசன் அவர்களுக்கு வாழ்த்து சொன்ன செய்தி ஆர்வமுடன் படிக்க வைத்தது. நீட் தேர்வில் நெல்லை மாணவர் முதலிடம் என்ற செய்தி இனிப்பாக இருந்தது பாராட்டுக்கள்.
பீகாரில் பத்திரிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் ஓய்வூதியம் ரூபாய் 16,000 ஆக உயர்வு என்ற செய்தி மகிழ்ச்சியாக இருந்தது.தவெக பிரச்சார ஸ்டிக்கர்களில் ஆனந்த் படத்தை நீக்கிவிட்டு விஜய் படம் மட்டும் இடம்பெற உத்தரவு செய்தது அரசியலை நன்கு புரிய வைத்தது .
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வந்த கோபால கிருஷ்ண கோகலே வரலாறு மிகவும் அருமை ஏற்கனவே படித்திருந்தாலும் அதை புதிதாக படிப்பது போல அருமையான வார்த்தைகளால் சித்தரிக்கப்பட்டிருந்தது.
பல்சுவை களஞ்சியம் பகுதி மிகவும் அருமை அதில் வந்த விடுகதை விடைகளை கண்டுபிடிப்பதற்கு ஆர்வமாக பிடிக்க வைத்தது. மனமார்ந்த பாராட்டுக்கள் ஜோதிடம் அறிவோம் பகுதியில் வந்த அனைத்து தகவல்களும் மிகவும் அருமை. ஆன்மீகத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை வந்து அதை அருளுடன் படிக்க வைத்தது.
காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா வெய்யொத்தி பக்தர்கள் பால்குடம் எடுத்த படமும் செய்து மிகவும் அருமை. தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் வட்ட மாநாடு பற்றி படித்து புரிந்து கொண்டேன்.
சுற்றுலா பகுதியில் வந்த கொடைக்கானலுக்கு அருகே பார்க்க வேண்டிய இடங்கள் என்று பட்டியலிட்டது மிகவும் அருமை. கொடைக்கானல் சென்றால் கண்டிப்பாக இந்த இடங்களை பார்க்க வேண்டும் இதுவரை பார்த்திராத ஒரு செய்தியாக இருந்தது.
இலங்கை 40 நாடுகளுக்கு இலவச விசா என்ற செய்தி மகிழ்ச்சியாக இருந்தது. வாட்ஸ் அப் பேஸ்புக் இன்ஸ்டால் இனி அரசியல் பதிவுகளுக்கு கட்டுப்பாடு என்ற செய்தி உண்மையான செய்தி. இதனால் பல தேவையில்லாத செய்திகள் பரவாமல் இருக்கும் .
ஞாயிறு விடியலில் அனைத்து பக்கங்களிலும் ஆர்வமுடன் படிக்க அழகான செய்திகளை தொகுத்து கொடுத்த தமிழ்நாடு இ பேப்பர்.காம் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி
உஷா முத்துராமன்