
இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு வந்திருக்கும் பிரதமரை பல அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதில் எடப்பாடி பழனிச்சாமியின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
பிரதமர் செல்லும் இடமெல்லாம் சாலையில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டு இருப்பதாக செய்தி படித்தேன்.
ஒரு நாள் கூத்துக்காக வேகத்தடைகளை அகற்றச் சொல்லி எந்தப் பிரதமரும் கேட்டிருக்க மாட்டார்கள்.
காக்கா பிடிக்கும் அதிகாரிகள் யாரோ எப்போதோ ஆரம்பித்து வைத்த இந்த வீண் விரய செயல் இப்போதும் தொடர்கிறது.
அகற்றப்பட்ட வேகத்தடைகள் அனைத்தும் விஐபி ஊர் திரும்பிய மறுநாளே புதிதாக அமைக்கப்படும். அதற்கு பல லட்சம் ரூபாய்கள் வீணாகும்.
அந்தப் பணியை காண்ட்ராக்ட் விடுவதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கமிஷன் கிடைக்கும்.
பாராளுமன்றத்தில் இருந்து விடைபெறும் வைகோ நெகிழ வைக்கும் தனது பிரிவு உபசார உரையை நிகழ்த்தி இருக்கிறார்.
அவர் திமுகவின் தயவால் பலமுறை நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டவர். இந்த தடவை விதி கமல்ஹாசன் உருவத்தில் விளையாடிவிட்டது.
இந்த தடவை கமல்ஹாசனுக்கு வாய்ப்பு அளித்துவிட்டது திமுக.
ட்ரோன் மூலம் வானிலிருந்து தரையில் இருக்கும் இலக்குகளை தாக்கும் ஏவுகணை ஒன்றை ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து வெற்றிகரமாக சோதனை செய்து இருக்கிறது.
உலகெங்கும் ராணுவத்தில்
ட்ரோன்கள் பயன்பாடு
அதிகரித்து வருகிறது.
குண்டு வீசுவதற்கு ஒரு போர் விமானம் செய்யும் வேலையை இந்த ட்ரோன்கள் செய்து விடுகின்றன. ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டாலும் அதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படுவதில்லை.
ஆனால் ஒரு போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டால் அதில் இருக்கும் விமானியின் உயிருக்கு ஆபத்து. வீழ்த்தப்பட்ட விமானத்தின் விலை மிக அதிகமாக இருக்கும்.
" காபி " கண்டுபிடிக்கப்பட்ட வரலாறும், காபி கொட்டை இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது எப்படி என்பதும் படிக்க சுவாரசியமாக இருந்தது.
வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?