
இன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் நலம் தரும் மருத்துவம் பகுதியில் எலுமிச்சை சாறு திரவம் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்கிற கட்டுரையை படித்தேன்.30 விதமான தாவர கலவைகளின் ஊட்டச்சத்துக்கள் அதில் விரும்பி இருக்கின்றன .அது மட்டுமல்ல உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியாகும் இது செயல்படுகிறது என்கிற நல்ல அரிய தகவலை அறிய முடிந்தது.தஞ்சை அன்பழகனின் " வாழ்ந்தே தீருவோம்" மெதுவாக நகர்ந்தாலும் மனதை தொடும் வகையில் அமைந்திருக்கிறது.வள்ளியம்மையின் இனி எப்படி போகப் போகிறது என்று வாசகரான எங்களை கவலைப்பட வைத்துவிட்டார். செல்லும் சேகர் அவர்கள் எழுதிய தீபாவளி ஐந்து நாள் விசேஷம் என்கிற தலைப்பில் ஆன கட்டுரை படித்தேன் இதுவரை தீபாவளி பண்டிகை ஒரு நாள் தான் இன்று நினைத்ததை மாற்றி ஐந்து நாட்களுக்கான விசேஷ தினங்களைப் பற்றி தெளிவாக எழுதி உள்ளவிதம் பல தகவல்களை அறிய வைத்தது. இன்றைய இதழில் புதுக்கவிதை பக்கத்தில் "புன்னகையோடு வலம் வந்தேன் கள்ளச் சிரிப்பு என்றார்கள் "என்று துவங்கும் புதுக்கவிதை எழுதியிருக்கிற வேலுர் முத்து ஆனந்த் கவிதை படித்தேன். மனிதன் நாலு பேருக்காக வாழ்கின்ற பொழுது இப்படி எல்லாம் மனிதர்கள் பேசுகிறார்கள் என்பதை மிக நேர்த்தியாக அவருக்கே உரித்தான கவிதை நடையில் அழகாக சொல்லி இருக்கின்ற விதம் இந்த சமுதாயத்தை படம் எடுத்துக் காட்டுவதாக இருந்தது.வேலூர் "முத்த கவிஞர்" முத்து ஆனந்தத்திற்கு எவ்வளவு பாராட்டுகளை வாரி வழங்கினாலும் போதாது. தினம்தோறும் மிக அழகாக கவிதை படித்து வரும் அவருடைய கவித்திறன் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
கவி-வெண்ணிலவன்
மணமேல்குடி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?