வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 16.07.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 16.07.25


  நெய்...உடல் நலனுக்கு நல்லதா? கெட்டதா? என்ற சந்தேகம் எனக்கு வெகுகாலமாக இருந்தது. நலம் தரும் மருத்துவம் பகுதி மூலம் நெய்யின் பயன்களையும் அவசியத்தையும் சொல்லி, அதை அளவோடு சேர்த்துக்கொண்டால் நன்மையே என்று தெளிவாக சொல்லியிருந்தவிதம் மனதிற்கு மிகவும் திருப்தியாக இருந்தது.


  விஜயலக்ஷ்மி குமரகுருவின் 'அதிரசமான உறவுகள்' கிராமிய மணம் தவழும், பாசம் மிகுந்த சிறுகதையாக இருந்தது. நினைக்கும்போதே அதிரசமாக இனித்தது.


  கே.லக்ஷ்மி நாராயணனின் 'கஸ்தூரியின் முடிவு' சிறுகதையை படித்தேன். கஸ்தூரியின் முடிவு சரியானதுதான். திருமணத்திற்கு முன்பே இப்படி வெறுக்கும் அந்த மாமி, கஸ்தூரிக்கு மாமியாரானால் என்ன பாடு படுத்துவாரோ! பிடித்து கல்யாணம் செய்யும் மாமியார்களே மருமகளை படாதபாடு படுத்தும்போது பிடிக்காமல் கல்யாணம் செய்தால் கேட்கவே வேண்டாம்!


  எப்போதோ நிகழ்ந்ததாக சொல்லபப்படும் ராமாயணத்தை, அதில் உள்ள பாத்திரங்களைக்கொண்டு, இப்போது கண்முன் நடப்பதுபோல எழுதும் கே.பானுமதி நாச்சியாரின் 'ஊர்மிளா' தொடர் உள்ளத்தைக் கவருகிறது.


  நெல்லை குரலோனை 'சும்மா' பாரட்ட வேண்டும் என்பதற்காக பாராட்டவில்லை. 'சும்மா..சும்மா..' கவிதை எழுதியதற்காக உண்மையாகவே அவரை பாராட்டுகிறேன்.


  கற்பூரவள்ளி இலைகள் தெரியும்.அந்த இலைகளில் இவ்வளவு பயன்கள் இருக்கிறதாயென்று கவி.வெண்ணிலவனின் கட்டுரையை படித்துதான் அறிந்துக்கொண்டேன்.


  நடேஷ் கன்னாவின் கற்கண்டு மருத்துவப் பயன்களை படித்தபோதே மனதில் இனித்தது. சர்க்கரையை விட பணங்கற்கண்டு விலை கொஞ்சம் அதிகமென்றாலும், அதன் மருத்துவ குணங்களுக்காக அதை கொஞ்சம் பொறுத்துக்கொள்ளதான் வேண்டும்!


  சிறுவர் பகுதியில் வெளிவந்த இராம. வேதநாயகத்தின் 'அணில்' என்ற பாடல் சிறுவர்கள் துள்ளிக்குதித்து பாடும்படி சிறப்பாக இருந்தது. கிளைக்குக் கிளையே தாவுகின்றாய் கிடைத்த பழத்தை உண்ணுகின்றாய்!' என்பது போன்ற உற்சாக துள்ளல்களுடன் இந்த பாடல் அமைந்திருப்பது பாராட்டும்படி சிறப்பாக இருக்கிறது


  -சின்னஞ்சிறுகோபு,

    சிகாகோ.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%