வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 22.08.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 22.08.25


  கிவி பழத்தின் மருத்துவ குணங்களை படித்து ஆச்சரியப்பட்டேன். நான் சிறுவயதில் இப்படி ஒரு பழம் இருப்பதை கேள்விக்கூட பட்டதில்லை. இப்போது தமிழ்நாட்டிலேயே பரலாக பழக்கடைகளில் இந்த கிவி பழம் கிடைக்கிறது. இந்த பழக்கத்திற்கு இவ்வளவு மருத்துவ குணங்கள் இருப்பதை நான் தமிழ்நாடு இ.பேப்பர் மூலம்தான் அறிகிறேன். இனி இந்த பழத்தையும் அவ்வப்போது வாங்கி சாப்பிட வேண்டுமென்று முடிவு செய்திருக்கிறேன்.


  ஹரணியின் 'மதிப்பிற்குரிய அறிவழகன்' சிறுகதை இன்றைய அரசியல் சுழ்நிலைகளை, ஜாதி அரசியல் கட்சிகளின் அடிப்பொடிகளை அப்படியே படம்பிடித்துக் காட்டியது. அறிவழகன் தன்னை சந்தித்த கட்சிக்காரர்களிடம் சரியாகதான் கேட்டிருக்கிறான். இனி அவர்கள் இந்த பக்கமே வரமாட்டார்கள்!


  கணபதியின் 'தவளைக்கு இ( ர )றங்கும் மழை' என்ற கட்டுரை ஒரு இலக்கிய அழகுடன் மனதை அப்படியே அள்ளியது. தவளை என்றால் எனக்கும் ஒரு வெறுப்புதான். ஆனால் இந்த கட்டுரையை படித்தபிறகு, தவளையை வெறுப்பது நியாயமான எண்ணமல்ல என்பது புரிந்தது. இனி மழைக்கான தூதுவனான தவளையை அன்புடன் நேசிப்பேன்.


  கவிஞர் இரா.இரவியின் சிகரெட் பற்றிய ஹைக்கூ கவிதைகள் நல்லதொரு அறிவுரை பாடமாக இருக்கிறது.

'இழுக்க இழுக்க இன்பமன்று இழுக்க இழுக்க துன்பம் சிகரெட். தீங்குத் தரும் கங்கு தீண்டாது ஒதுங்கு சிகரெட்...' என்று ஒவ்வொரு கவிதைகளும் ஒவ்வொரு பாடமாக மனதில் பதியும் வணணம் இருக்கிறது. புகைப்பவர்களை சிந்தித்து நிறுத்த வைக்கும் அற்புதமான கவிதையாக இந்த சிகரெட் கவிதை புகைந்திருக்கிறது!


  மாரடைப்பு குறித்த (Heart Attack) குறித்த நடேஷ்கன்னாவின் விழிப்புணர்வு கட்டுரை பயன்மிக்கது. இது எல்லோரும் படித்து தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயமாகும்!



-சின்னஞ்சிறுகோபு,

 சிகாகோ.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%