வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 23.07.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 23.07.25


  சிறுநீரகத்தின் செயல்பாடுகளைக் காக்கவல்ல 3 முக்கிய உணவுகள் பீட்ரூட், கேரட், கொத்தமல்லி என்று குறிப்பிட்டு, அவற்றின் பயனையும் சிறப்பையும் சொல்லி அவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள உதவி செய்திருக்கிறது தமிழ்நாடு இ.பேப்பர். இதைப்போன்ற எளிமையான முறையில் கடைப்பிடிக்க கூடிய உடல்நலக்குறிப்புகள் எல்லோருக்கும் உதவக்கூடிய ஒன்றாகும்.


  காலைநேரத்தில் பம்பரமாக வேலை செய்யும் குடும்ப தலைவி ராஜத்தின் பரபரப்பை பார்த்து, பல குடும்பத்தில் காலை நேரத்தில் பல பெண்கள் இப்படிதான் இயங்குகிறார்கள் என்பதை உணர்ந்தேன். இந்த இக்கட்டான நேரத்திலும் ராஜத்துக்கு பால் பொங்கி அடுப்பில் வழிந்திருப்பதைப் பார்த்து சிரிப்பு வந்ததைப் பார்த்ததும், எனக்கும் சிரிப்பு வந்தது. சசிகலா விஸ்வநாதனின் 'பால் பொங்கியது' சிறுகதை நல்ல குடும்ப கதையாக மனதில் நிற்கிறது.


  சீர்காழி ஆர்.சீதாராமனின் 'விதவையின் வலி' சிறுகதை, கணவனை இளம் வயதில் இழக்கும் பெண்களின் மனத்துயரை அதே வலியுடன் உணர்த்தியது. இதைப்போன்ற ஒரு துயரநிலைக்கு ஆளாவனர்கள், அதன்பிறகு எதிர்காலத்தில் எப்படி எதிர்நீச்சல் போட்டு வாழவேண்டும் என்பதையும் உணர்த்தியது.


  'கங்கையில் கரைக்கப்படும் பாவங்கள் எங்கே மறைகின்றன?' என்ற ஆன்மிக கேள்விக்கு விடையாக கே.கணேசன் எழுதிய கட்டுரை பாராட்டும்படி இருந்தது. பாவங்கள் எப்படி இந்த உலகில் சுற்றி சுற்றி வருகின்றன என்பதை அறிந்தபோது வியப்பாக இருந்தது.


  'வந்து பிறந்து விட்டேன்! வாழத் தெரியவில்லை!' , 'மழையும் ரெயிலும்', 'வேண்டாம் வேற்றுமை' என்ற வே.கல்யாண்குமாரின் கவிதைகள் மூன்றும் தங்கு தடையில்லாத எழில் மிகுந்த எழுத்து நடையில் கருத்தாழத்துடன் மனதைக் கொள்ளைக்கொண்டது. சாதிக்கும் மதத்துக்கும் நிறத்துக்கும் இனத்துக்கும் சாய்ந்து நீ சாக்கடையில் நீநந்தலாமா' போன்ற அர்த்தமுள்ள வரிகள் சிந்திக்க வைத்தது.


  பல்சுவை களஞ்சியத்தில் 'நீ மனிதனாகவே இரு...' என்ற சிவ.முத்து லட்சுமணனின் தகவலும், நடேஷ் கன்னாவின் 'சிந்திக்க சில வரிகள்..' என்ற தகவலும் மிகச் சிறப்பாக இருந்தது. படித்தபின்னும் மனதில் நிற்கிறது.



  -சின்னஞ்சிறுகோபு,

   சிகாகோ.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%