பணம் மட்டும் பெரிதல்ல என்பதை உணர்த்திய ஹேமா வாசுதேவனின் 'நிராகரிப்பு' என்ற சிறுகதை இக்காலத்தில் ஆங்காங்கே குடும்பத்தில் நடக்கும் குடும்ப பிரச்சனைகளை உயிரோட்டமாக படம் பிடித்துக்காட்டியது.
ஹரணியின் 'காமராசரின் அம்மா' என்ற சிறுகதை என்னை பெரிதும் கவர்ந்தது. அரங்கநாதன் யோசனைப்படி பேரன் சுதந்திரத்தினத்தில் பேசி பாராட்டும் பரிசும் வாங்கியதற்கு அந்த பேரன் மட்டுமல்ல; அந்த மகத்தான தலைவர் காமராசரும் என்பதும் புரிந்தது.
காமராஜரைப்பற்றி எத்தனை எத்தனை தகவல்கள். இதில் பல தகவல்களை இப்போதுதான் முதன் முதலாக அறிகிறேன். அசோக்ராஜாவின் இந்த தொகுப்பு காமரஜர் வாழ்க்கை வரலாற்றையே படித்த ஒரு உணர்வும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
கவிஞர் இரா.இரவியின் 'மது' என்ற கவிதை மது என்னென்ன கெடுதல்கள் செய்யும் என்பதை தெளிவாக உணர்த்தியது. குடிப்பழக்கம் இல்லாதவர்கள் இந்த கவிதையை படித்து சிந்தித்தால், எந்த காலத்திலும் குடிக்க ஆரம்பிக்கவே மாட்டார்கள் என்பது நிச்சயம்!
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?